1 Jun 2016

2 இராணுவத்தினர் என்னைத் தாக்கினர் வன ஜீவராசிகள் பாதுகாப்பு சுற்றுவட்ட அதிகாரி சுரேஸ்குமார்

SHARE
கிரமசேவை உத்தியோகஸ்தரின் வேண்டுகோளிற்கிணங்க நானும் அவ்விடத்திற்குச் சென்றேன் அப்போது வாகனம் ஒன்றில் காட்டில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் இருப்பதைக் கண்டோம், அவ்வேளையில் சிவில் உடை தரித்துநின்ற இலங்கை இராணுவத்தினர் எம்மைத் தாக்கினர். என மட்டக்களப்பு வன ஜீவராசிகள்
பாதுகாப்பு சுற்றுவட்ட அதிகாரி நாகராஜா சுரேஸ்குமார் புதன் கிழமை (01) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்  கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்திற்குடப்பட்ட புலிபாய்ந்தகல் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மரம் வெட்டப்படுவதாகவும், காட்டு மிருகங்கள் வேட்டையாடப் படுவதாகவும், தகவல் கிடைத்ததையடுத்து அவ்வடத்திற்கு செவ்வாய்க்கிழமை (31) இரவு இஸ்த்தலத்திற்கு விரைந்த அக்கிராமத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகஸ்தர் மற்றும், மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அடங்கிய குழுவொன்று சென்றுள்ளது. அதில் இராணுவத்தினாரால் தாக்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்றுவரும், மட்டக்களப்பு வன ஜீவராசிகள் பாதுகாப்பு சுற்றுவட்ட அதிகாரியான நாகராஜா சுரேஸ்குமார் என்பவரே இவ்வாறு தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…..

இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும், அந்த வகையில் செவ்வாய்க் கிழமை இரவு இயற்கை வழங்கள் அழிக்கப்படுவதாகக் கேள்வியுற்ற நாம், அப்பகுதி கிராம சேவை உத்தியோகஸ்தர் அடங்கிய குழு வொன்றுடன் அப்பகுதிக்குச் சென்றிருந்தோம், அப்போது எனக்கும் என்னுடன் சென்ற கிராம சேவை உத்தியோகஸ்தருக்கும், அங்கு சிவில் உடையில் நின்ற 2 இராணுவத்தினர் அடித்தனர். 

இதனால் எனது நெஞ்சுப்பகுதி, வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது. அன்றய நிலமை நாம் உயிருக்குப் போராடிக்கொண்டுதான் இருந்தோம், நாம் அரச உத்தியோகஸ்தர்கள், கடமைக்காகத்தான்  வந்துள்ளோம், என அவர்களிடம் தெரிவித்திருந்த போதிலும், அவர்களது முகாமுக்கு அருகில் கொண்டு வந்து தான் எம்மைத் தாக்கினர்கள். இச்சம்பவம் தொடர்பில் நான் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். என்னைத் தாக்கிய இராணுவ உத்தியோகஸ்தர்களை நான் அடையாளம் காட்டத் தயாராகவுள்ளேன் எனக்கு மாத்திரமல்ல, என்னுடன்  கிராம சேவை உத்தியோகஸ்த்தரும் தாக்கப் பட்டமைக்கு நீதியான விசாரணை வேண்டும், என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: