30 Jun 2016

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 177வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் அவர்கள் ஆற்றிய உரை

SHARE
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 177வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் அவர்கள் ஆற்றிய உரை செவ்வாய்க்கிழமை, ஜூன் 28 மாலை வணக்கங்கள். நாட்டின் மிகவும் பழைமையான, செல்வாக்கு மிக்க வர்த்தக நிறுவனமான இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 177ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டமையை மிகுந்த கௌரவமாக கொள்கின்றேன்.
இந்த நிறுவனத்தில் மீண்டும் ஒரு வருடத்திற்கு பொறுப்புக்களை ஏற்று நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தலைவர் ரணதுங்க மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டு என்னுடைய உரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன். இலங்கைக்கான இந்த அரியசந்தர்ப்பத்தில், இந்த நாட்டிற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதில் சம்மேளனம் பெரும் பங்கு வகிக்க முடியும். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மீட்கவும், வெளிப்படையான ஆட்சிமுறையை உருவாக்கவும், மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் இலக்கு வைத்த சீர்பட்ட நிகழ்ச்சி நிரல் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையை ஜனாதிபதி சிறிசேன அவர்களுக்கு வாக்காளர்கள் வழங்கிய 2015ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையின் இந்த ஆச்சரியமிகு நிலைமாற்றம் நிகழ்ந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையின் கீழ் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி முறைக்கு உறுதிபகரும் பாராளுமன்ற கூட்டணியை அவர்கள் தெரிவு செய்த போது, இந்த சீர்பட்ட நிகழ்ச்சி நிரலை இலங்கை மக்கள் மீண்டுமொரு முறை உறுதி செய்தனர்.

சட்ட ஒழுங்கு, நீதியின் சமமான நிர்வாகம் மற்றும் அனைவருக்கும் பொருளாதார சந்தர்ப்பம் ஆகிய தமது புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன், கசப்புணர்வுடனான கடந்த காலம் என்பதற்கு அப்பால் இலங்கை அரசாங்கமானது, உள்ளடக்கமான, சாதாரணமான, சமாதானமான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்றது. இந்த நேர்நிலையான தொலைநோக்குப் பார்வையினை சர்வதேச சமூகம் அரவணைத்துக் கொண்டு, இலங்கை மக்களுக்கு மகத்தான ஆதரவுகளை வழங்கி குறிப்பிட்டத்தக்களவு உதவியினை விஸ்தரித்துள்ளது. 

இன்று, இலங்கையுடனான அமெரிக்க உறவுகள் வரலாற்றிலேயே மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். தேவையான அரசியலமைப்பு திருத்தம், தேசிய நல்லிணக்கம், மற்றும் ஐக்கிய நாடுகளிற்கான தமது வாக்குறுதிகளை பூர்த்தி செய்தல் என்பவற்றை நோக்கி ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செல்கின்ற வேளையில், பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பல், நல்லாட்சியை முன்னிறுத்தல், மற்றும் இலங்கையர்கள் அனைவரும் சமமான உரிமைகள், சமமான சந்தர்ப்பங்கள், மற்றும் இன அல்லது பூர்வீகம் குறித்த பாரபட்சமின்றி மோதலுக்குப் பின்னரான அபிவிருத்தியின், வளத்தின் முழுமையான பயன்களை அனுபவிப்பதனை உறுதி செய்வதற்கான முயற்சிகள் சார்ந்த எமது ஆதரவில் அமெரிக்கா தொடர்ந்தும் உறுதியாக உள்ளது. இலங்கையுடன் அமெரிக்க பங்காளித்துவம் 60 வருடங்களாக இலங்கைக்கு அபிவிருத்தி மற்றும் மனிதநேய உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகின்றது. விவசாயம் முதல் தொழிற்றுறை அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், சக்தி மற்றும் இயற்கை வளங்கள், நல்லாட்சிமுறை மற்றும் மனிதநேய நடவடிக்கைகள் என அனைத்து துறைகளிலும் நாம் குறிப்பிடத்தக்க அளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வருடத்திற்கான அமெரிக்க உதவியானது மொத்தம் அண்ணளவாக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும். அடுத்து வரும் வருடங்களிலும் இதற்கு இணையான தொகையை நாம் கோரியுள்ளோம். நல்லாட்சிக்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் விளைவாக, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருளாதார திருத்தங்களுக்கு வசதியளிக்கும் மேலதிக உதவியில் மில்லியன் கணக்கான டொலர்களை கொண்டு வரும் வாய்ப்பு கொண்ட தொடக்க நிலை நிகழ்ச்சிக்கு மில்லேனியம் சாலன்ஜ் கோப்பரே~ன் இலங்கையை மதிப்பீடு செய்கின்றது. இலங்கையின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் எமது முயற்சிகள் நிதி உதவிகளுடன் மாத்திரம் மட்டுப்பட்டதல்ல. 

இந்த வருடத்தில் இதுவரை, விரிவடைவதற்கு அதிக வாய்ப்பு கொண்ட இரண்டு துறைகளான சுற்றுலாத் துறை மற்றும் சக்தி தொழிற்றுறையில் சிறந்த பயிற்சிகள் தொடர்பில் 50 வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை அமெரிக்கா பயிற்றுவித்துள்ளது. உலக வர்த்தக நிலைய இசைவு மற்றும் சம்பந்தப்பட்ட வர்த்தக விடயங்கள் தொடர்பில் இலங்கைச் சுங்கம் மற்றும் வேறு நிறுவனங்களைச் சேர்ந்த நூறிற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பயிற்சி பெற்றுள்ளனர். பொது நிதி முகாமைத்துவம் தொடர்பில் அரசாங்க நிபுணத்துவத்தை ஊக்குவிக்கவும் நாம் பணியாற்றி வருகின்றோம். தொழில் முனைவு திறனை முன்னிறுத்துவதற்கு மற்றும் தொழில் வழங்குனர்களின் தேவைகளுக்கு பொருந்தும் தொழில் திறன்களை கட்டியெழுப்புவதற்கு செயலமர்வுகளை நடத்துவதற்கான உள்@ர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களை கொண்டு வருகின்றோம். பங்காளித்துவதற்கான புதிய பாதையாக அமெரிக்க - இலங்கை பங்காளித்துவ உரையாடல் அமைந்துள்ளது. கடந்த பெப்ரவரியில் இதன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றன. பெண்களை வலுப்படுத்தல் மற்றும் முதலீட்டுச் சூழ்நிலையை மேம்படுத்தல் உள்ளடங்கலாக பொருளாதார ஒத்துழைப்பு என்றதொரு விடயம் உள்ளடங்கலாக நான்கு பிரதான தூண்களை மையப்படுத்தியதாக இந்த கலந்துரையாடல்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. 

ஏப்ரல் மாதத்தில் வா~pங்டனில் அமெரிக்க - இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு
கட்டமைப்பு உடன்படிக்கை பேரவை கூட்டத்தை (வுஐகுயு) நடத்தியிருந்தோம். எமது வர்த்தக மற்றும் வாணிப உறவுகளை இது மேலும் வலுப்படுத்தும். இலங்கையின் எதிர்காலத்திற்கு பிரகாசமான தொலைநோக்கு உறவுகளை வலுப்படுத்துதலானது, தற்போதைய உதவியின் தாக்கம் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சந்தர்ப்பங்களை மதிப்பீடு செய்வதற்கு இலங்கை முழுவதும் பயணிப்பதற்கான சந்தர்ப்பத்தை எனக்குத் தந்துள்ளது. நாட்டின் மனித மற்றும் பௌதீக மூலதனம் மற்றும் வேகமாக வளரும், பல்வகைமையான பிராந்தியம் என்பன கேந்திர முக்கியத்துவம் ஆகிய உறுதியான அடிப்படையுடன் வேர்விட்டுள்ள பாரிய பொருளாதார சாத்தியங்களால் நான் பேராச்சர்யம் கொண்டுள்ளேன். நான் எங்கு சென்றாலும், திருகோணமலையாக இருக்கலாம், யாழ்ப்பாணமாக இருக்கலாம், ஹம்பாந்தோட்டையாக இருக்கலாம், அல்லது கொழும்பில் எங்காவது இருக்கலாம், இனம் அல்லது சமூக-பொருளாதார பின்னணி பற்றிய பாரட்பட்சமின்றி இலங்கையர்கள் அனைவரும் தமது முழு ஆற்றலை எட்டினால் இந்த நாடு எத்தனை சிறப்பானதாக இருக்கும் என்று ஆச்சர்யம் கொள்ளாமல் என்னால் இருக்க முடிவதில்லை.

இன பாரபட்சமின்றி ஒவ்வொரு பிள்ளையும் சிறந்த கல்வியைப் பெற்று, அதியுயர்ந்த அலுவலகத்திற்குச் செல்லக் கூடிய இலங்கையைப் பற்றி கற்பனை செய்யுங்கள்; நண்பர்களே! இராணுவத் தலைவராகும் தமது கனவினை எந்தவொரு சிறுவரும் எட்டும், ஜனாதிபதியாகும் கனவை எந்தவொரு சிறுவரும் எட்டும், வளமான, வெகுமதியான, அர்த்தமுள்ள வேலைவாய்ப்பு, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை ஒன்று மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்காக வெளிநாடு செல்வதற்கு தேவையற்ற தமது எந்தவொரு சிறுவரும் எட்டும் இலங்கை குறித்து கற்பனை செய்யுங்கள்;. ஆகக் குறைந்த ஒழுங்குவிதிகள் மற்றும் வெளிப்படையான, உதவிகரமான மற்றும் சாத்தியமான அரசாங்க அதிகாரத்துவம் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ஆகக்கூடிய உதவி என்பவற்றில் இருந்து பயன்களை பெறும் அதேவேளை, இளைஞர் ஒருவர் தொழிலை ஆரம்பிக்கும், தொழில்முனைவு செயற்பாட்டில் ஈடுபடும், ஊழியர்களை வேலைக்கமர்த்தி, முகாமை செய்யும், செயற்பாடுகளை விஸ்தரிக்கும் மற்றும் வெற்றி பெறும் இலங்கை ஒன்று குறித்து எம்மால் கற்பனை செய்ய முடியுமா நண்பர்களே? உங்களுடைய காரில் ஏறி கொழும்பில் இருந்து திருகோணமலை அல்லது யாழ்ப்பாணத்திற்கு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்களில் செல்லும் எதிர்காலத்தை நாம் அடைய முடியுமா? உள்ளக மக்கள் மையங்களை இணைக்கும், உயர்தரமான நெடுஞ்சாலைகளை கற்பனை செய்து பாருங்கள். இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் நுழைவாயிலாக அமையக் கூடிய நான்கு சர்வதேச துறைமுகங்களையும் இணைக்கும் நவீன ரயில்பாதை வலையமைப்பு ஒன்று குறித்து சிந்தித்து பாருங்கள். தற்போது உலக சந்தைகளில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் மக்களுக்கு வளத்தினை, இணைப்பினை வழங்குவதற்கு நாடெங்கிலும் பயணிகள் மற்றும் சரக்கு விமான நிலையங்களை கற்பனை செய்து பாருங்கள். 

எதிர்கால பொருளாதார வளர்ச்சியை போ~pப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பினை கட்டியெழுப்புவதனை இலங்கை எதிர்பார்த்துள்ள வேளையில், உலகின் பல முன்னணி பொருளாதாரங்கள் உள்வாங்கியுள்ள பொது-தனியார் பங்காளித்துவ மாதிரி தொடர்பில் அரசாங்கமும், தனியார் துறையும் கவனம் செலுத்தலாம். தனியார் துறை நிதியை அணிதிரட்டல் மற்றும் செயற்றிட்ட தயார்படுத்தல், செயற்படுத்தல் மற்றும் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கு உதவுவதன் மூலம் உட்கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கு தேவையான பொது நிதியின் பற்றாக்குறையை கடப்பதற்கு பொது-தனியார் பங்காளித்துவம் உதவும். 

பொது-தனியார் பங்காளித்துவ முறையை வடிவமைத்தல், கட்டமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் சவால் மிக்கதாகும். அத்துடன், சிக்கலான செயற்பாடாகும். ஹம்பாந்தோட்டை அல்லது திருகோணமலையில் விசேட பொருளாதார வலயம் எந்தளவு வளத்தினை எட்ட முடியும்? கட்டுப்பாட்டு விதிகள் இன்றி இவ்வாறான வலயங்களில் தனியார் துறையானது சிறந்த வர்த்தக சந்தர்ப்பங்களை நிர்ணயிக்கக் கூடியதாக, தனியார் தொழிற்றுறை செயற்படுவதற்கு அனுமதியளித்தலானது மிகவும் அவசியமான வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் தொழில்களை உருவாக்கும். 

இளைஞர்கள் தமது திறன்கள் மற்றும் திறமைகளை தாய்நாட்டில் வைத்து, நாட்டின் எதிர்காலத்திற்கு, தொழில்களை உருவாக்குவதற்கும் மற்றும் புதிய வளங்களை விருத்தி செய்வதற்கு முதலீடு செய்வதற்கு விரும்புவார்கள் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதன் உயர் திறனை போ~pத்தல் மற்றும் தக்க வைத்துக் கொள்ளல் மூலமும், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் ஏனைய வினைத்திறன் மிக்க சந்தைகளுடன் போட்டியிடக் கூடிய தொழில் தரங்களை விருத்தி செய்தல் மூலமும், சிறப்பான தகவல் தொழில்நுட்ப சேவைகள், முன்னேற்றமான மருத்துவ சிகிச்சை மற்றும் நிதி சேவைகளில் இலங்கை உயர்ந்த நிலையை அடைய முடியும்.

சிறந்த உட்கட்டமைப்பு மற்றும் குடிமை வசதிகளுடன், இந்த ஆட்பலமானது உள்நாட்டிலேயே இருப்பதனை கற்பதனை செய்து பாருங்கள். சிறந்த கொள்கைச் சூழலின் பயன்கள் பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இசைவான யூகிக்கக்கூடிய, வெளிப்படையான மற்றும் சீரான பொருளாதார கொள்கைகளே இந்த தொலைநோக்கினை எட்டுவதற்கான பிரதானமாக தேவையான அம்சங்களாகும். அரசாங்கத்திற்கு தேவையான வரிகளை செழிக்கச் செய்வதற்கு, புகுத்துவதற்கு தனியார் துறைகளை சாதகமானகளமாக உறுதி செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு சொந்தமான தொழிற்றுறைகள் உதவ முடியும். 

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்ட நாடுகளில் சிறந்த கொள்கைச் சூழல்களுக்கு பொருந்தும் வகையில் சட்ட மற்றும் ஒழுங்குகளின் கீழ் செயற்படுவதற்கு தனியார் துறையை சுதந்திரமாக்குவதன் மூலம் இந்த தொலைநோக்கினை எட்டுவதற்கு அரசாங்க பொருளாதார கொள்கை வசதியளிக்க முடியும். எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய மற்றும் வெளிப்படையான ஒழுங்குமுறைகளுடன் சட்டரீதியான வர்த்தகங்கள் இலகுவில் பொருந்தும். இந்த தொலைநோக்கினை எட்டுவதற்கு இலங்கையானது பல தடைகளை கடக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டில் பற்றாக்குறை என்பது அவற்றில் மிகவும் சிக்கலானதாகும். இலங்கையின் பொருளாதாரத்தை நிலைமாற்றுவதற்கான வழிகாட்டிக்கான 10 கோட்பாடுகளில் இலங்கை வர்த்தக சம்மேளனம் வலியுறுத்தியுள்ளதைப் போன்று, “வெளிநாட்டில் இருந்து மூலதனத்தை கவர்வது தொடர்பில் இலங்கையின் துரித வளர்ச்சியானது முக்கியமாக தொக்கி நிற்கின்றது”. எழுந்தமான தொழில்நுட்பம் மற்றும் சிறந்த வர்த்தக பயிற்சிகளுக்கான வெளிப்படுத்தல்களுக்கு அணுகும் வசதியை வழங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மேலும் தூண்டுகின்றனர். 

வெளிநாட்டு நேரடி முதலீட்டை கவர்வதற்கு இலங்கையானது கடுமையான பிராந்திய போட்டியை கடக்க வேண்டும். இந்தோ-பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பங்களாதே~;, வியட்நாம், மியன்மார், கம்போடியா மற்றும் ஏனையோரும் இதே முதலீட்டாளர்களில் தங்கியுள்ளனர். முதலீட்டு டொலர்களை வெல்வதற்கு, வரி குறியீடுகள் மற்றும் வரிச்சலுகைகள் முதல் கொள்வனவு மற்றும் ஊழலை தடுப்பது வரை பொருளாதாரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தெளிவான மற்றும் சீரான கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கை போட்டியை ஏற்படுத்த வேண்டும். உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான கவர்ச்சியான சூழல் ஒன்றிற்கு தெளிவான, சீரான கொள்கைகளே மைல்கற்களாகும். தெளிவான மற்றும் சீரான கொள்கையானது களத்தினை சமப்படுத்துவதுடன், வெளிப்படைத்தன்மையை உருவாக்கி, எதிர்வுகூறலை வழங்கும்.

இவையே முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதாகும். 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் முடிவானது, தேவையான நிதி மற்றும் பொருளாதார திருத்தங்களை முன்னெடுப்பதற்கான அர்த்தமுள்ள சந்தர்ப்பத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. ஐஆகுஇனால் அடையாளம் காணப்பட்ட குறுகிய கால சமத்துவமின்மைகள் மற்றும் நடுத்தர சவால்களை அடையாளம் காண்பதற்கு, குறைந்த வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை, நிதி கொள்கை திருத்தம், உயர் அரசாங்க வருமானம், அரச தொழிற்றுறை சீர்திருத்தம், உறுதியான பொது நிதி முகாமைத்துவம் மற்றும் உயர் வர்த்தக மற்றும் முதலீட்டை ஆதரவளித்தல் ஆகிய ஆறு தூண்கள் அடங்கிய சீர்திருத்த நிகழ்ச்சி ஒன்றினை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கீழ் இலங்கையின் செயற்பாடானது, உறுதியான பொருளாதாரம் ஒன்றை உருவாக்குவதற்கு மாத்திரமன்றி, வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான தளமாக இலங்கையை கவர்வது தொடர்பிலான சமிக்ஞையையும் சர்வதேச வர்த்தக சமூகத்திற்கு கொண்டு செல்லும். புதிதாக வருபவர்கள் வினைத்திறன் மிக்க வகையில் செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை உறுதி செய்வதே எந்தவொரு நாட்டினதும் வர்த்தகச் சூழலின் அத்தியாவசிய அம்சமாக உள்ளது. அரசாங்கமானது ‘வர்த்தகத்துக்கானது’ என்ற தெளிவான, சீரான பருப்பொருளாதார கொள்கைகளை உள்வாங்கி, பிரயோகித்தாலும், தனியார் துறையிடமிருந்து ஊக்கமளிக்கும் செய்திகளை செவிமடுப்பதற்கு முதலீட்டாளர்கள் விரும்புவர்.

உள்ளக தொடக்க நிலை முதல் கட்டமைக்கப்பட்ட பல்தேசிய நிறுவனங்கள் வரை அனைத்து சட்டரீதியான புதியவர்களையும் அரசாங்கமும், தனியார் துறையும் வரவேற்க வேண்டும். சந்தைக்கு புதிதாக வருபவர்கள், ஒட்டுமொத்த பொருளாதார சூழல்-தொகுதிக்கு பயனளிக்கும் புதிய எண்ணங்களை, இளமைத் துடிப்பை, மற்றும் உதவிகரமான போட்டியை வழங்க முடியும். எதிர்வுகூறக்கூடிய, வெளிப்படையான மற்றும் சீரான பொருளாதார கொள்கை என்பன சரியாக கலந்திருத்தலானது, இலங்கையில் இருந்தும், உலகளவில் பிரபலமான நிறுவனங்களில் இருந்தும் புதியவர்கள் உருவாக பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும். இன்று, தமது எதிர்கால வளர்ச்சி இலங்கைக்கு வெளியே தங்கியுள்ளது என பல முன்னணி உள்@ர் நிறுவனங்கள் எண்ணக் கூடும். அவர்கள் பிராந்திய மற்றும் உலக சந்தைகளை அடைவதற்கு எதிர்பார்த்துள்ளனர். இந்த சந்தைகளை எட்டும் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்டுள்ளமையால், பெரும்பாலானோர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அரவணைக்கின்றனர்.

இந்த நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் வளத்திற்கான பங்காளர்களாக இருக்க முடியும். பொருளாதார கொள்கை மாற்றங்கள் ஏன் விரும்பத்தக்கவை என்பதனை அரசாங்கத்திற்கும், வாக்காளர்களுக்கும் தொடர்ந்து விளக்க வேண்டியது சம்மேளன உறுப்பினர்களாகிய உங்களது மகிழ்ச்சியான கடமையாகும். வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு அழைப்பு விடுக்கும் பொருளாதார சூழலுக்கான கொள்கை மாற்றங்கள் நீண்ட கால பொருளாதார வளத்தினை நோக்கி இலங்கையை வழிநடத்தும். நண்பர்களே! என்னுடைய உரையை நிறைவு செய்வதற்கு, உலகெங்கிலும் மிகவும் கவர்ச்சிகரமான, உறுதியான, யூகிக்கக்கூடிய வர்த்தக சந்தர்ப்பங்களில் அமெரிக்க முதலீட்டாளர்கள் டிரில்லயன் கணக்கான டொலர்களை முதலீடு செய்துள்ளார்கள் என்பதனை வலியுறுத்த விரும்புகின்றேன். வினைத்திறன், புத்தாக்கம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பொறுப்பு, நன்னெறி நடத்தை, கூட்டாண்மை சமூக பொறுப்பு மற்றும் ஊழியர் உறவுகள் என்பவற்றில் உலகில் அமெரிக்க நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. யூகிக்கக் கூடிய, தெளிவான மற்றும் சீரான பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளில் முதலீடு செய்வதற்கும், வர்த்தகம் செய்வதற்கும் இந்த அமெரிக்க நிறுவனங்கள் எப்போதும் தயாராக உள்ளன. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கொள்கை தலைமைத்துவத்துடன், அவ்வாறான தேசமாக இலங்கை மாற முடியும் என நான் நம்புகின்றேன்.




SHARE

Author: verified_user

0 Comments: