தடை விதித்தவர்களே அதனை நீக்கினார்கள் இத்தகைய நிருவாக மனநிலை மாற்றம் வரவேற்கத்தக்கது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர்  அஹமட் தெரிவித்தார்.கிழக்கு மாகாண முதலமைச்சர்  முப்படைகளின் தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்ததையடுத்து கருத்து வெளியிட்ட முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.  
கடந்த 20ம் திகதி  திருகோணமலை மாவட்டம் சம்பூர்  வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியொருவருக்கும் முதலமைச்சருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் போது முதலமைச்சரால் கடற்படை அதிகாரி மீது   கடும் வார்த்தை பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து முப்படைத் தலைமைகள் கூடி முப்படைகளின் தளங்களுக்குள் முதலமைச்சர் நுழைவதிலிருந்தும் முதலமைச்சர்  கலந்து கொள்ளும் நிகழ்வுகளை முப்படைகள் புறக்கணிக்கப் போவதாகவும் தீர்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த   தீர்மானம் தற்போது   நீக்கப்பட்டுள்ளதாக  இராணு பேச்சாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர கூறியதையடுத்து முதலமைச்சர் கருத்து வெளியிட்டார்.
இந்த முடிவைத் தான் வரவேற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.  தடை விதிக்கும் தீர்மானத்தை யார் எடுத்தார்களோ அவர்களே முன்வந்து அத்தடையையும் நீக்கியிருக்கின்றார்கள்.
இந்த முடிவுக்கான காரணம்  பற்றி தான் எதுவும் இதுவரை அறிந்திருக்கவில்லை என்றும்  முதலமைச்சர் குறிப்பிட்டார்ஜனாதிபதி நாட்டில் இல்லாத நேரத்தில் முப்படையினரால் எடுக்கப்பட்டிருந்த இந்த முடிவு அரசியல் பின் புலத்தில் எடுக்கப்பட்டது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்  முன்னதாக தனது கண்டனத்தை வெளிப்படுத்தி  ஜனாதிபதிக்கும்  பிரதமருக்கும்   நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்து கடிதமொன்றை எழுதியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
.jpeg) 
 
 
.jpeg) 
0 Comments:
Post a Comment