15 May 2016

முஸ்லிம் பெண்களின் இளவயதுத் திருமணத்தினால் பாதிப்புக்கள் அதிகம் சட்டத்தரணி ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன்

SHARE
                            (எச்..ஹுஸைன்)
இலங்கையில் முஸ்லிம் பெண்களுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைப்பதன் மூலம் அவர்கள் சமூக மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர் என புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்

குறிப்பாக 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது, முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளதை அறியமுடிகின்றது.

இதனால் இந்த வயதிற்குட்பட்ட சிறுமிகளின் கல்வி உரிமைகள் நிராகரிக்கப்படுவது பாரதூரமான ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மேலும், இளவயதுத் திருமணத்தின் காரணமாக அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்குத்; தயாராக அவர்களது உடல் பலமும், வளர்ச்சியும் இருக்கப் போவதில்லை.

இதனால் அவர்கள் திருமணம் செய்து சில காலத்திலேயே விவாகரத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும் என்று முஸ்லிம் தரப்பினர் கூறுகின்றனர்;, முஸ்லிம்களல்லாத அரச தரப்பினரோ மதம் சார்ந்த இந்த விடயத்திற்கு தங்களால் சுயமாக முடிவெடுக்க முடியாது என கூறுகின்றனர்.

இதனால்; கடந்த 64 வருடங்களாக இந்த சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தும்  இதுவரை எதுவித மாற்றங்களும் ஏற்படவில்லை.

வயதெல்லை ஒன்றை நிர்ணயிப்பது இஸ்லாத்துக்கு முரண் என்று சிலர் வாதிடுகின்றனர்.

இஸ்லாமிய சமூகத்தில் 12 வயது என்ற எல்லை இருப்பது மட்டும் எந்த அடிப்டையில் என்று புரியவில்லை.

இஸ்லாமிய முஸ்லிம் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை நாடுகள் தத்தமது நாட்டின் சமூகத்தின் தேவைக்கேற்றபடி பெண்களின் திருமணத்துக்காக 16, 18 போன்ற வயதெல்லையை நிர்ணயித்;துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஆகவேதான் இதை மதப் பிரச்சினையாக பார்க்காமல் சிறுமிகளின் உடல், உளரீதியான பிரச்சினையாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

SHARE

Author: verified_user

0 Comments: