15 May 2016

துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருச்சடங்கு.

SHARE
(க.விஜி)

வரலாற்றுச்சிறப்பு மிக்க மட்டக்களப்பு துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருச்சடங்கானது எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (17.05.2016) இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பிக்கப்பட்டு செவ்வாய்க் கிழமை (24.05.2016) காலை இடம்பெறும் திருக்குளுர்த்தி பாடுதலுடன்
வருடாந்த உற்சவமானது நிறைவுபெறவுள்ளதாக துறை நீலானவணை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர் கி.விஜயகுமார் தெரிவித்தார்.

வருடாந்த உற்சவத்தில் வெள்ளிக்கிழமை அம்பாள் வீதி உலாவும், ஞாயிற்றுக் கிழமை கன்னிக்கால் வெட்டும் நிகழ்வு, கலியாண பூசைகளும் நடைபெற்று, திங்கள் கிழமை வட்டுக் குத்துதல் பூசை நிகழ்வும் இடம்பெறவுள்ளதுடன், கடந்த காலங்களில் ஆலயத்தின் பரிபாலன சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவி வகித்தர்களை வாழும் போதும் வாழ்த்துவோம் எனும் கௌரவிப்பு, நிகழ்வும், இசை நிகழ்ச்சிகளும் ஆலயத்தில் இடம்பெறவுள்ளன. 

உற்சவகால கிரிகைகள் யாவும் ஆலய பிரதம பூசகர் செ.தருமரெத்தினம் தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன் அடியார்களின் அங்கப்பிரதட்சனை, தீட்சட்டி, காவடி எடுத்தல், போன்றன அடியார்களின் நேர்த்திக் கடன் நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளது. உற்சவ காலங்களில் ஆலயத்தில் அன்னதான நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

SHARE

Author: verified_user

0 Comments: