17 May 2016

கிரான் நெற்செய்கைக் கண்டத்தில் 205 ஏக்கர் அறுவடைக்குத் தயாராய் இருந்த விளைந்த வேளாண்மை நாசம்

SHARE
தற்போது பெய்துவரும் பெரு மழை, வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இடைப்போகமாக செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்குத் தயாராய் இருந்த விளைந்த நெல் வயல்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல சேவைத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிரான் நெற்செய்கைக் கண்டத்தில் சுமார் 205 ஏக்கர் அறுவடைக்குத் தயாராய் இருந்த விளைந்த வேளாண்மை நாசமாகியுள்ளதாக கிரான் பிரிவுக்குப் பொறுப்பான விவசாய போதனாசிரியர் பி. ரவிவர்மன் தெரிவித்தார்.

கிரான் வயல்கண்டத்தில் கிரான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள வயல்களில் இடைப்போகமாக செய்கை பண்ணப்பட்ட, அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த சுமார் 205 ஏக்கர் விளைந்த நெல்வயல்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது.

தொடர்ந்ததும் இவ்வாறான மழை, வெள்ள நிலைமை இன்னும் சில தினங்கள் நீடித்தால் மேலும் தாழ்நில நெல்வயல்;கள் முழுமையாக பாதிக்கப்படுமென விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இக் காலப்பகுதியில் வழமையில் இவ்வாறு மழை வெள்ளம் வருவது மிக அரிதான நிகழ்வு என்றும் தற்போதைய திடீர் மழை, வெள்ளம்  காரணமாக தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடைப்போக நெற்செய்கையிலீடுபட்ட விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: