27 Apr 2016

சித்திரை வருடப்பிறப்பினை முன்னிட்டு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி ஏற்பாடு செய்த கலாசார விளையாட்டு விழா

SHARE
இ.சுதா

சித்திரை புது வருடப்பிறப்பினை முன்னிட்டு கல்லாறு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி ஏற்பாடு செய்த கலாசார விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (24) மாலை வாழ்வின் எழுச்சி வங்கி முகாமையாளர் பூ.தவேந்திரன் தலைமையில்
துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும வாழ்வின் எழுச்சி திணைக்களப் பணிப்பாளர் வி.குணரெத்தினம், களுவாஞ்சிகுடி பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் வே.வரதராஜன், கிராம சேவை உத்தியோகத்தர்களான தி.கோகுலராஜ்இ வ.கனகசபை மற்றும் வாழ்வின் எழுச்சி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட கிராம பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சக்கு மரம் ஏறுதல், கிடுகு பின்னு;தல்இ முட்டி உடைத்தல்இ பலுன் ஊதி உடைத்தல்இ பணிஸ் சாப்பிடுதல், சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம் மோட்டார் சைக்கிள் மெல்லோட்டம் உட்பட பல்வேறு விளையாட்டுக்கள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் கல்லாறு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

SHARE

Author: verified_user

0 Comments: