23 Apr 2016

ஊடகத்துறை அமைச்சின் புதிய செயலாளர் நாளை மறுநாள் கடமையேற்பு

SHARE
பாராளுமன்ற மறுசீரமைப்பு  மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி நிமல் போபகே நாளைமறுநாள் (25) காலை 11.30 மணிக்கு கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பட்டதாரியான போபகே சட்டத்தரணியாகவும் கணக்காளராகவும் பணியாற்றுவதுடன் கணக்கியல் தொடர்பான பிரபல விரிவுரையாளரும் ஆவார்.

பெருந்தோட்டத்துறை கூட்டுத்தாபனத்தின் தலைவராக பணியாற்றிவரும் போபகே இலங்கை கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை மற்றும் மனித வள அபிவிருத்தி சபையின் என்பவற்றின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் தேசிய பயிற்சி மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் பிரதி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

முன்னாள் இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரியான அவர், பல்வேறு அமைச்சுக்களிலும்  இலங்கை பல்வேறு பிரதேசங்களில் பிரதி அரச அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: