20 Apr 2016

காட்டு யானைத் தாக்குதலில் பாடசாலை மாணவி பாதிப்பு.

SHARE
செவ்வாய் கிழமை (19) இரவு மட்டக்களப்பு மாவட்டம் இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தில் புகுந்த காட்டுயானை பாடசாலை மாணவி ஒருவரைத் தாக்கியுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…

செவ்வாய் கிழமை (19) இரவு பகுதிநேர வகுப்புக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை வீதி ஓரத்தில் நின்ற காட்டுயானை குறித்த மாணவியை தூக்கி வீசியுள்ளது.  இதில் மயக்கமுற்ற மாணவி உடனடியாக  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மட்.தும்பங்கேணி கண்ணகி மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் ச.வேணுசா என்ற மாணவியே இவ்வாறு பாதிக்கப ;பட்டுள்ளார்.

அண்மைக் காலமாக இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்களும். அட்டகாசங்களும், அதிகரித்துள்ள இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் 2 காட்டுயானைகள் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் கிராமத்தினுள் புகுந்து வீடுகளையும். பயிர்களையும், அழித்து வருவதோடு மக்களையும் தாக்கி வருவதாக அக்கிராம மக்கள் கவலை தெரிவிப்பதோடு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடையத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கத் காலதாமதம் காட்டுவதால் தாம் தொடரந்து காட்டு யானைகளினால் பாதிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றோம் எனவும் இளைஞர் விவசாயத்தி திட்டக் கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: