24 Apr 2016

களுவாஞ்சிகுடியில் ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா நிதியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட பேரூந்து தரிப்பு நிலையம் திறந்து வைப்பு.

SHARE
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கருவாஞ்சிகுடி பிரதான வீதியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட பேரூந்து தரிப்பு நிலையம் ஞாயிற்றுக் கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.களுவாஞ்சிகுடி கிராமத் தலைவர் அ.கந்தவேள் தலைiமியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, மற்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரும், வர்த்தக வாணிபத்தறை அமைச்சின் ஆலோசகருமான சோ.கணேசமூர்த்தி ஆகியோ பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலநிதி எம்.கோபாலரெத்தினம், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ஏ.ஐ.சித்திக் உட்பட கிராம பெரியோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து  கொண்டிருந்தனர்.

கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலியின் ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக் கீட்டில் இப்பேரூந்து தரிப்பு நிலையம் நிருமாணிக்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் சிறியதொரு கொட்டகையில் இயங்கி வந்த இப்பேரூந்து தரிப்பு நிலையம் அமையப் பெற்றுள்ளதனால் களுவாஞ்சிகுடியிலிருந்து குந்தூர மற்றும், நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பிரயாணிகள் ஆசனப் பதிவுகளை இலகுவில் மேற் கொள்ளவும், போக்குவரத்துக்களுக்கும், இலகுவாக அமைந்துள்ளதாக பொதுமக்களும், பிரயாணிகளும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இப்பேரூந்தூ தரிப்பு நிலையம் எமது கிராமத்தின் எல்லைப் பகுதயில் அமைந்துள்ளது. இப்பேரூந்து தரிப்பிடத்திற்கு பட்டிருப்பு பேரூந்து தரிப்பு நிலையம் என பெயரிட வேண்டும் எனத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்களின் பலத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் இப்போருந்து தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
















SHARE

Author: verified_user

0 Comments: