14 Sept 2015

அபிவிருத்திக் குழுத்தலைவர் பதவி யோகேஸ்வரனுக்கு கிடைத்தால் மட்டக்களப்பு அபிவிருத்தியடையும்!

SHARE
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு வழங்கும் பட்சத்தில் இக்கழக மைதானம் மற்றும் இம் மாவட்டத்தின் அபிவிருத்திகள் அனைத்தும் சிறந்த முறையில் இடம்பெறும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்.
கோட்டைக்கல்லாறு ப்ரன்ஷிப் விளையாட்டுக் கழகத்தின் 19வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வும், கௌரவிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை மாலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் போது ஐந்தாம் தர புலமைப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, உயர் தரப் பரீட்சை என்பவற்றில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன், வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், சா.வியாழேந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், மா.நடராசா, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரத்தினம் ஆகியோருக்கு கழகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இக்கழகத்தின் பொது மைதானம் சீரின்மை காணப்படுவதாக கழகத்தினர் தெரிவித்தமையை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் இரா.துரைட்ணம் ஆகியோர் மைதானத்தினை பார்வையிட்டு இதனை சீர்செய்வதற்கு உறுதி வழங்கியதுடன், ஏனையவர்களும் உறுதி வழங்கி இருந்தனர்.
கழகத் தலைவர் செ.செல்வபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், சா.வியாழேந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், மா.நடராசா,
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரத்தினம், ஓய்வு பெற்ற கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.பாக்கியராசா மற்றும் கிராம அமைப்புக்களின் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள், கழக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: