17 Sept 2015

திருப்பழுகாமம் மட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய கபடிப்போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்.

SHARE
மட்/ திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 15 வயதிற்குட்பட்ட மாணவிகள் தேசிய ரீதியில் இடம்பெற்ற கபடிப் போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்று வித்தியாலயத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும்இ பெருமை சேர்த்துள்ளனர். 

பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கபடி போட்டி திங்கட் கிழமை (14) கிண்ணியா எழில் அரங்கில் நடைபெற்றது. 
இதில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 27 பாடசாலைகள் கலந்து கொண்டிருந்தன.

இப்போட்டியில் முதலாம் இடத்தை யாழ். புண்டத்தரிப்பு மகாவித்தியாலயமும்இ இரண்டாம் இடத்தை மட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டுள்ளது.

மாகாண மட்டத்தில் நடைபெற்ற கபடி போட்டியில்  மட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் முலிடத்தைப் பெற்றுக்கொண்டு தற்போது தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

இவர்களை.இ.புவேந்திரன் மற்றும் கி.கிருஷ்ணராஜன் ஆகிய ஆசிரியர்கள் நெறிப்படுத்தியிருந்தர்கள். 

மட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் விளையாட்டு வரலாற்றில் முதற்தடவையாக தேசிய ரீதியில் வெற்றிபெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கதகும்.

இந்நிலையில் தேசிய ரீதியில் வெற்றி பெற்றுள்ள இவ்வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு, அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம்,  திருப்பழுகாமம், அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பு, சூட்டிங் இஸ்டார் விளையாட்டுக் கழகம், போன்ற பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: