4 Sept 2015

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றி: கிழக்கு முதல்வர்

SHARE
பழுத்த அரசியல்வாதியும் அரசியலில் நீண்ட கால அனுபவம் உள்ளவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டமை, இலங்கை அரசியலில் புதியதோர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நாசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பந்தனுக்கு கிடைத்துள்ள பதவி குறித்து முஸ்லிம் சமூகம் முழுமனதுடன் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் புதிய நல்லாட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளாமை இந்த நல்லாட்சியின் சிறப்பாகக் கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
1977 ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் அமிர்தலிங்கம் இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு சிறுபான்மையினத்தவர்களுக்கு பெருமை சேர்த்தார்.
அதேபோன்று 38 வருட காலத்திற்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.
இனப்பிரச்சினை தீர்வில் சம்மந்தன் போன்றவர்களின் கருத்துக்களும் முஸ்லிம் தலைவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு நியாயமான தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்தார்.
ஆங்கில, தமிழ் மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற சம்பந்தன், சிங்கள மொழியிலும் நன்கு பரீட்சயம் பெற்றவர். ஆழமான அரசியல் அறிவைக்கொண்ட அவர் சிறந்த பேச்சாளாரும்கூட பாராளுமன்றத்தின் அவர் வாதிடும் திறமை அலாதியானது.
கிழக்கு மாகாணத்தில் பிறந்த சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானமை, கிழக்கு மண்ணுக்கு பெருமை தருகின்றது என்று தெரிவித்தார்.
    • SHARE

      Author: verified_user

      0 Comments: