10 Aug 2015

மாணவர் மேம்பாட்டு செயற்திட்டத்தில் சிவானந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்; முற்போக்கான நடவடிக்கை

SHARE

மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபரணத்தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி” என்ற வீரத்துறவி விவேகானந்தரின் வாக்கிற்கு இணங்க சிவானந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கமானது 2017ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு தங்களது ஆளுமையை விருத்தி செய்யும் முகமாகஇமாணவர்களின் பரிபரணத்துவத்தை வெளிப்படுத்தும் முகமாக சங்க நிருவாகமானது.

அதிபர்ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள்பழைய மாணவர்கள் போன்ற தரப்பினர்களுடான மேற்கொண்ட பல சுற்று கலந்துரையாடல்களினுடாக “வளமான எதிர்காலத்தை திட்டமிடுவோம்” எனும் நிகழ்ச்சித்திட்டத்தை ஒழுங்;கு செய்து கடந்த 10-07-2015 தெர்டக்கம் 12-07-2015 வரை வதிவிடமுகமாக மட்டக்களப்பு தன்னாமுனை சர்வோதய வளாகத்தில் ஆத்மார்த்தமாக உணர்வுபுர்வரமாக மனம் நிறைவாக வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 


மேலும் பல ஆளுமை விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை மாவட்ட ரீதியாக  நடாத்துவதற்கான முன்மாதிரியான செயற்றிட்டமாக இது அமைந்தது என்றால் மிகையல்ல. அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளின் செயற்பாடுகளில் ஒர் மைல் கல்லாக சிவானந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்; முற்போக்கான இவ் நடவடிக்கை அமைந்தது என வருகை தந்திருந்த பல புத்திவிகள் கருத்து வெளியிட்டனர். இந் நிகழ்;ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைவதற்கு பல சிவானந்தியன்கள் தங்களுடைய உன்னதமான பங்களிப்பினை பணமாக மற்றும்இஉடல் உழைப்பாக  நல்கியுள்ளனர் என்பது குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். 

வதிவிடமுகாமின் தொடக்க விழா 10.07.2015 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.இந் நிகழ்விற்கு சிவானந்த தாயவள்; ஈன்ற பிள்ளைகளான எமது பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும்இவைத்திய கலாநிதியுமாகிய கே.ரி.சுந்தரேசன் பேராசிரியர் எம்.செல்வராசாமுன்னால் கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி  எம்.லோகேஸ்வரன் கிழக்கு பல்கலைக்கழக விவசாய விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரி.திருச்செல்வம் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் வி.விமலநாதன் தோல் வைத்திய நிபுணரும் வைத்திய கலாநிதியுமாகிய என்.தமிழ்வண்ணன் பொறியியலாளர் என்.ஸ்ரீஸ்கந்தராஐh இபாடசாலையின் அதிபர் கே.மனோராஐ வதிவிட முகாமின் ஒருங்கிணைப்பு வளவாளரான திரு சொர்ணலிங்கம் மற்றும் பிரதி அதிபர் மகாலிங்கசிவம்; இஆசிரியர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நேர முகாமைத்துவத்தி;ன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்கள் வதிவிட முகாமிற்கு வருகை தந்ததிலிருத்து அவர்களின் அணைத்து செயற்பாடுகளும் நேரசூசி அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. மாணவர்களின் கற்பனை எண்ணக்கருவாக்கம மேடைக் கூச்சம் களைதல் என்பவற்றை நோக்காக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை மட்டும் இடம்பெற்றன.இந் நிகழ்ச்சிகள் மாணவர்களின் அசாத்தியமான திறமைகளை புடம்போட்டு காட்டுபவையாக அமைந்திருந்தன.

இவ்வாறு தொடர்ந்த வதிவிட முகாமிற்கு வளவாளர்கள் வெளியிடங்களிலிருந்தும் அழைக்கப்பட்டனர்.அவர்கள் கல்வி அபிவிருத்தி இதலைமைத்துவம் சவால்களுக்கு முகம் கொடுத்தல்இதகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் பயன்பாடுஇஆளுமை விருத்தி போன்ற விடயங்களில் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.

 புனித மிக்கல் கல்லூரியின் பிரதி அதிபர் வணபிதா றஐPவன் பாதிரீயார் அவர்கள் வண்ணாத்திபச்சி சமதான பூங்கா அரங்க செயற்பாட்டாளர்கள் ஸ்ரீலங்கா ரெலிகொம் பொறியியலாளர் யோ.கோபிநாத் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இளைஞர் ஆளுமை விருத்தி ஆலோசகருமான திரு காண்டிபன் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

அத்தடன் எமது பழைய மாணவர்களாகிய கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முன்னால் பீடாதிபதி திரு எம்.லோகேஸ்வரன்இகிழக்கு பல்கலைக்கழக விவசாய விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரி.திருச்செல்வம் வைத்திய நிபுணராகிய சி.விவேகானந்தன் BCAS ( விகாஸ்) நிறுவனத்தின் கணணித் தொழிநுட்ப விரிவுரையாளராகிய ஆர்.விஐயகுமார் ஆகியோர் தங்களின் ஆக்கப+ர்வமான கலந்துரையாடல் மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகளினூடாக மாணவர்களின் எண்ணம்இசொல்இசெயல் என்பவற்றில் சிறந்த மாற்றங்களை வரச் செய்தனர்.

இவ் அனைத்து செயற்பாடுகளையும்ஒருங்கினைத்து மாணவர்களின் ஆளுமை விருத்திக்காக பல்வேறு செயற்பாடுகளை வடிவமைத்து முதன்மை வளவாளராக செயற்பட்ட எமது வித்தியாலய பழைய மாணவரும் இளைஞர் ஆளுமை விருத்தி ஆலோசகருமான திரு சொர்ணலிங்கம் அவர்களின் சேவை அளப்பரியது.

இந் நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் பெறுமதியினையும் தரத்தினையும கௌரவிக்கும் முகமாக மருத்துவ விற்பனை பிரதிநிதி திரு.எலிண்டன் சேவியர் அவர்களால் மாணவர்களுக்கு குடைகள் மற்றும் போசாக்கு பால் மா பைக்கற்றுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இறுதி நாளாகிய ஞாயிற்றுக் கிழமை (12.07.2015) அன்று மாலை மாணவர் முகங்களில் ஏதோ சாதித்த பிரகாசமான ஒளிஇலட்சிய வேட்கை இபுதுப்பொலிவு என அவர்கள் பயிற்சி முகாமிற்கு வருகை தந்த நாளை விட வதிவிட பயிற்சி முடித்துச் செல்லும் நாளில் அவர்களில் பெரும் மாற்றம் அது ஆரோக்கியமான மாற்றமாக தென்பட்டது.

 அது பழைய மாணவர் சங்கத்திற்கு மாணவர்களின் நல் எதிர் காலம் குறித்த நம்பிக்கையினை மேலும் உறுதியாக்கியது அத்துடன் மாணவர் ஆளுமை விருத்திச் செயற்பாட்டின் அவசியத்தினையும் வலியுறுத்திச்சென்றுள்ளது.மாணவர்களின் பின்னூட்டல் கருத்துரைகள் தங்களை தாங்கள் அறிந்து கொண்டதன் விளைவு வார்த்தைகளின்றி கண்ணீராய் வெளிவந்தது வருகை தந்திருந்தோரின் நெஞ்சங்களை சற்று தடுமாறவும் வைத்ததுஇ கண்ணீரையும் அவர்களுக்கு வரவழைத்தது.

 இவ்வாறான “வளமான எதிர்காலத்தை திட்டமிடுவோம்” போன்ற ஆளுமை விருத்தி செயற்றிட்டங்கள் சிவானந்த வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் அத்தியாவசியமாகும் என்பதனை மாணவர்களின் பின்னூட்டல் கருத்துரைகள் பறைசாற்றி நிற்கின்றன.















SHARE

Author: verified_user

0 Comments: