29 Jul 2015

உரிமையுடன் அபிவிருத்திக்கு வாக்களிக்க வேண்டும்-பிரசாந்தன்

SHARE

மட்டக்களப்பில் தமிழர்களின் பிரதிநிதித் துவத்தினை தக்கவைத்துக் கொள்ள தமிழர்கள்தான் முன்வர வேண்டும் அரசியல் அதிகாரம் வாக்குப் பலத்திலேயே தங்கியுள்ளது .என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ .பிரசாந்தன் குறிப்பிட்டார் .
ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு கிராம சேவைகள் பிரிவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே மேற்கன் டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில் ;


மட்டக்களப்பில் 75% மாக உள்ள தமிழர்கள் வாக்களித்து 3 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வார்கள் . அவர்களும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதோடு மாtட்ட அபிவிருத்திக்கூட்டத்தில் பேசுபவர்களாக மாத்திரம் இருப்பார்கள் மாறாக 25% மான இஸ்லாமியர்கள் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பும் இஸ்லாமிய தலைவர்கள் அமைச்சு பதவிகளை எடுத்து மாவட்ட அபிவிருத்தி குறித்த தலைவராகவும் பொறுப்பேற்று நிதி , நிருவாக காணி என எல்லாவற்றிலும் ஆதிக்கம் செய்வார்கள் .

உரிமை உரிமை என்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாக்களித்து 3 தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாடாளுமன்றம் அனுப்ப 1 அல்லது 2 உறுப்பினர்களை பெறும் இஸ்லாமிய தலைவர்கள் மாவட்டத்தின் அபிவிருத்தியை தீர்மானிக்கும் சக்தியாக மாறுகின்றனர் .

மாவட்ட அபிவிருத்திகளுக்கு தலைவராக வசீர்சேகுதாவுத் , அமீர் அலி ,என பட்டியல் நீழுமே தவிர தமழர்கள் அபிவிருத்திக்கு தலைவராக யார் இருந்துள்ளார் ? 2008-2012 வரை சி . சந்திரகாந்தன் தலைவராக இருந்த காலப்பகுதியிலேயே மட்டக்களப்பில் என்னிலடங்கா அபிவிருத்தி நடைபெற்றது . வெறும் நான்கு ஆண்டுளில் தமிழ் பகுதிகளில் நடைபெற்ற அபிவிருத்திப்பணிகள் தொடர்ந்து தமிழ் பகுதியில் நடைபெறவேண்டும் .

உரிமைக்காக வாக்களிக்கும் தமிழர்கள் அபிவிருத்திக்காக வாக்களிக்க வேண்டும் மட்டக்களப்பில் 4 தமிழ் பிரதிநிதித்துவம் தமிழ்தரப்பில் தெரிவு செய்யப்படவேண்டும் அதில் 1 அபிவிருத்திக்காக சி . சந்திரகாந்தனாக இருக்க வேண்டும் . ஒரு குடும்பத்தில் 4 வாக்குகள் இருந்தால் 3 வாக்கு உரிமைக்கு ம் தெரிந்தவர்களுக்கும் என அளிக்கப்பட்டாலும் மாவட்ட அபிவிருத்திக்கு 01 வாக்கு சி .சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் தமிழர்கள் அரசியல் அதிகார இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்
SHARE

Author: verified_user

2 Comments:

Shiva Sampanthan said...

ஆம் அபிவிருத்திக்குத்தான் எங்கள் வாக்கு. ஆனால் உங்களுக்கு இல்லை. நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா கணேசமுர்தி. அவருக்குத்தான் எஙகள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம்.
www.ganeshamoorthy.com

www.facebook.com/pages/Somasuntharam-Ganeshamoorthy/863770150338624

Shiva Sampanthan said...

ஆம் அபிவிருத்திக்குத்தான் எங்கள் வாக்கு. ஆனால் உங்களுக்கு இல்லை. நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா கணேசமுர்தி. அவருக்குத்தான் எஙகள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம்.
www.ganeshamoorthy.com

www.facebook.com/pages/Somasuntharam-Ganeshamoorthy/863770150338624