16 Dec 2014

மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பா.சசிகரனிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல், நேர்காணல்

SHARE
நேர்காணல் : மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின்  மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பா.சசிகரனிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில 45000 ஏக்கர் மரமுந்திரிகை செய்கை பண்ணக் கூடிய நிலம் அமைந்துள்ளது. ஆனால் இதுவலையில் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் 9000 ஆயிரம் ஏக்கர் நிலத்தில்தான் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டுள்ளன. மேலதிக 36000 ஏக்கர் நிலங்கள் மரமுந்திரிகை செய்கை பண்ணப்படாமல் இருக்கின்றன.

என மரமுந்திரிகைக் கூட்
டுத்தாபனத்தின்  மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பா.சசிகரன்  தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் பற்றி நாணையம் வார இதழ் மேற்படி மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின்  மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பா.சசிகரனிடம் மேற்கொண்ட நோர்காணலை இங்கு தருகின்றோம்.

கேள்வி: உங்களுடைய கூட்டுத்தாபனம் பற்றி சுருக்கமாக விபரிக்கவும்?
பதில்: இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் 1978 ஆண்டு உருவாக்கப்பட்டு மரமுந்திரிகை செய்கையை ஊக்குவிக்கு முகமாக கூட்டுத்தாபனம் விரிவாக்கம், பெருந்தோட்டம், சந்தைப்படுத்தல் என பிரிக்கப்பட்டு இலங்கையில் சேவையாற்றி வருகிறது.


கேள்வி: மட்டக்களப்பு மாவட்டத்தில்உங்களுடைய செயற்பாடு எவ்வாறு அமைந்திருக்கின்றது?

பதில்: மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டுத்தாபனத்தின் சேவைகளாக இரண்டு (02) பெருந்தோட்டங்களை நிர்வகிப்பதுடன், விரிவாக்கல் திட்டத்தின் கீழ் காணி உரித்துடைய மக்களுக்கு மானிய திட்டத்தின் கீழ் நல்லின மரமுந்திரிகை கன்றுகள், பசளை, அவர்களது முயற்சிக்கான கூலி, ஆலோசனை போன்றவற்றை மட்டக்களப்பின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அமுல்படுத்தி வருகிறோம்;. 

கேள்வி: இம்மாவட்டத்தில் தங்களுடைய கூட்டுத்தாபனத்தினால் பயனாளிகளுக்கு எவ்வகையான உதவிகளை நல்கி வருகின்றீர்கள்?
பதில்: நல்லின மரமுந்திரிகை கன்றுகள், பசளைவகைகள் , கூலி , ஆலோசனை , பயிற்சி வகுப்பு, சிறந்த விவசாயிகளை தெரிவு செய்து பரிசில் வழங்கல் போன்ற உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

கேள்வி: மேலும் பயனாளிகளுக்கு தங்களால் வழங்கப்படவுள்ள உதவிகள் யாவை?

பதில்: மட்டு மாவட்டத்தில் மரமுந்திரிகை செய்கை பண்ணும் கிராமங்கள் தோறும் சங்கங்களை உருவாக்கி அதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வுகளை, ஏற்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பொருத்தமான மரமுந்திரிகைச் செய்கையை அதிக அளவில் செய்கை பண்ணி மக்களின் வருமானத்தை அதிகரிப்பதுடன்:, இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் எமது மாவட்டத்தையும் பங்குதாரர் ஆக்குவதாகும்.

கேள்வி: எத்தனை ஏக்கரில் மர முந்திரினை செய்கை பண்ணப்பட்டுள்ளது. மேலும் எத்தனை ஏக்கரில்  இவை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்து. விரிவாகத் கூறுங்கள்?

பதில்: எமது மட்டக்களப்பு மாவட்டம் மரமுந்திரிகை செய்கைக்கு பெயர் போன மாவட்டம். மட்டக்களப்பு மாவட்ட மரமுந்திரிகை பருப்பிற்கு கிராக்கி அதிகம். எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை செய்கை பண்ணக்கூடிய 45000 ஏக்கர் காணி உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இதுவரையில் எமது கூட்டுத்தாபனம் மூலம் 9000 ஏக்கர் மானிய திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ளது.

ஓவ்வரு வருடமும் எமது கூட்டுத்தாபனம் 500 ஏக்கர் மானிய திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டு வருகிறது. இதனை மேலும் அதிகரிக்க அரச சார்பற்ற நிறுவனங்களை அணுகி செய்கை பண்ணும் ஏக்கரை அதிகரிப்பதுடன் மரமுந்திரிகை செய்கை பண்ணும் காணியினுள் ஊடுபயிர் செய்கையை ஊக்குவித்து இடைக்கால வருமானத்தை பெற விழிப்புணர்வை ஏற்படுத்தல். இதற்கான ஒரு திட்டத்தை ஏற்படுத்தவுள்ளோம்.


கேள்வி:  விளைச்சல் எவ்வாறு அமைந்துள்ளது, சந்தைவாய்ப்புக்களுக்கு தாங்கள் எவ்வகையான உதவிகளை மக்களுக்கு மேற்கொண்டு வருகின்றீர்கள்?

பதில்: மரமுந்திரிகை விதைக்கான கேள்வி மிகவும் அதிகம். வருடா வருடம் விலை அதிகரித்தே செல்கின்றது. கேள்வி அதிகமாகவுள்ளதால் சந்தைப் படுத்தலில் எதுவித சிரமமும் இல்லை. அத்துடன் உற்பத்தியாகும் விதைகளை சந்தையில் காணப்படும் விலைக்கு எமது கூட்டுத்தாபனம் போட்டி போட்டு கொள்வனவு செய்கின்றது.

கேள்வி: இத்திட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தங்கள் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்புக்கள் என்ன ( உதவிகள், பயிற்சிகள், புதியவகை மரமுந்திரிகை கன்றுகள்)

பதில்: தற்சமயம் எமது கூட்டுத்தாபனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மானிய திட்டத்தின் கீழ் இரண்டு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. விதை மூல மானியதிட்டம், ஒட்டு மூல மானிய திட்டம். இத்திட்டங்களில் இணைத்துக் கொள்ளப்படும் விவசாயிகளுக்கு நல்லின கன்றுகள், பசளை, பயிற்சி வகுப்பு, கூலி, ஆலோசனை போன்றவைகளை வழங்கி வருகின்றோம்.

கேள்வி: மரமுந்திரிகை செயற்றிட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் விஸ்த்தரிப்பதற்கு தாங்கள் ஏதும் விஷேட யுக்திகள் வைத்திருக்கின்றீர்களா?
பதில்: எமது மாவட்டத்தில் மரமுந்திரிகை செய்கையை விஸ்தரிக்க மரமுந்திரிகை செய்கை பற்றிய விழிப்புணர்வு, அதாவது இச்செய்கை மூலம் ஏற்படும் செலவீனம், இலாபம், பராமரிப்பு போன்றவைகளை கிராமம் தோறும் துண்டு பிரசுரம் மூலம் தெளிவு படுத்தவுள்ளோம், மாதிரி தோட்டங்களை ஏற்படுத்தி காண்பிக்கவுமுள்ளோம்.

கேள்வி: உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இங்கிருந்து மரந்திரிகை உற்பத்திகளை ஏற்றுகுமதி செய்கின்றீர்களா?

பதில்: மரமுந்திரிகை எமது உள்நாட்டு கேழ்விக்கே வழங்க முடியாத நிலையே உண்மையாகும். இருந்த போதிலும் சிறிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கை மரமுந்திரிகை பருப்பிற்கு உலக நாடுகளில் அதிக கிராக்கி என்பதையும் இச்சந்தர்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: இறுதியாக மரமுந்திரிகை செய்கையில் ஆர்வமுள்ள மக்கள் தங்களின் எவ்வகையில்?  எவ்வாறு நாடுவது?  உங்கள் முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் கூறுங்கள்?

பதில்: எமது கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய அலுவலகம் கீழ் வரும் முகவரியில் இயங்கி வருகிறது.
இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம், ஹாடி மரமுந்திரிகை தோட்டம், கிரான். தொலைபேசி – 0653658566 (அலுவலகம்) 0718187889
கேள்வி: இவற்றினை விடமேலும் ஏதாவது தாங்கள் கூறுகின்றர்களா?


பதில்:இலங்கையில் மரமுந்திரிகை அறிமுகம்
மரமுந்திரிகையானது (அனகார்டியம் ஒக்சிடன்ரேல்)
Anacardiumoccidentale அனகார்டியேசியே
(Anacardiaceae) குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். இத்தாவரத்தின் உற்பத்தியின் இடம் பிறேசில். 16ம் நூற்றாண்டில் போத்துகீசரால் இலங்கை, இந்தியா, தென்னாபிரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப் படுத்தப்பட்டது. இத்தாவரம் முக்கியமாக கரையோரத்தில் ஏற்படும் மண்ணரிப்பை தடுப்பதற்காக நாட்டப்பட்டது. இது வறண்நில அயணமண்டல தாவரம்.

கேள்வி:இதன் பிரயோசனங்கள்    

பதில்:  பருப்பு : போசாக்கானது. இதன் மூலம் இனிப்பு, பிஸ்கட், ஐஸ்கிறீம், சொக்கலட், கேக், மாஜரின், கறி போன்றவை தயாரிக்கலாம்.

அதன் கோது:
( shell) : எண்ணெய் போன்ற திரவம்
(cashew nut shellliquid) என்பர். இத்திரவம் வர்ண உற்பத்தி, பீடை கொல்லி, பிரேக்லைனிங், பிளாஸ்ரிக் உற்பத்திகளுக்கு பயன்படும்.

பழம்: உண்பதற்கு, பழக்கலவை, மென்பானங்கள் தயாரிக்க, அற்ககோல் உற்பத்தி, வைன் உற்பத்தி, சட்ணி, பாணி போன்றன தயாரிக்க உதவுகின்றன.

விதை கோது
(Testa) : கோழி தீன், தனின் சாயம் உற்பத்தி, நுளம்பு திரி  உற்பத்திகளுக்கு உதவுகின்றன.

மரம் : விறகு, பொதி செய்யும் பெட்டி தயாரிக்க பயன் படுகின்றன.

மரத்தின் பிசின் : ஒட்டு வேலைகளுக்கு

போஷக்கு : புரதம் - 21%, கொழுப்பு - 46% காபோகைற்றேற்று - 25% இவற்றை விட கல்சியம், பொசுபரசு, இரும்புச்சத்து, போன்ற கனியுப்புக்களும், உயிர்சத்துக்களான தயமின், றைபோபிளேவின், பீற்றா கரோட்டின், உயிர்சத்து K  (விற்றமின் K) போன்றனவும் அடங்கியுள்ளன.


இனங்கள் : இதுவரை காலமும் வேறு நாட்டு இனங்களையே பயிரிட்டு வந்தோம். தற்பொழுது எமது நாட்டிற்கு பொருத்தமான, அதிக விளைச்சல் உள்ள இனங்கள் எமது கூட்டுத்தாபன ஆராச்சிப் பிரிவினதும், வயம்ப பல்கலைகளக உதவியுடனும் பல இனங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவையாவன
WUCC  1 , 19 , 21 , 23 போன்ற இனங்களாகும். 

( நேர்கண்டவர் எஸ்.ராதி )
SHARE

Author: verified_user

0 Comments: