6 Oct 2026

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக கருதப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனை ஆரம்பம்.

SHARE

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக கருதப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனை ஆரம்பம்.

குருக்கள்மடம் சந்தேகத்திற்கடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாகக கருதப்படும் இடத்தில் இன்றயதினம் செவ்வாய்கிழமை(06.10.2026) அகழ்வுப் பணியின் ஓர் அங்கமாக மண் படிம மாதிரி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் மக்களை ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி  நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் அவர்களின்  முன்னிலையில் செவ்வாய்கிழமை(06.10.2026) அகழ்வுப் பணியின் ஓர்  அங்கமாக மண் படிம மாதிரி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

முறைப்பாட்டாளரான ரவூப் அப்துல் மஜீத், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், பொலிசார், குற்றத்தடுப்பு பிரிவு, உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியுள்ளனர்.







 

SHARE

Author: verified_user

0 Comments: