ஒவ்வொரு கிராம சேவக பிரிவிலும் 50 பயனாளிகள்
அஸ்வஸ்ம தேசியத் வலுவூட்டல் திட்டம் முன்னெடுப்பு.
புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியுடன் 79 ஆயிரத்து 200 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராம சேவக பிரிவிலும் 50 பயனாளிகள் அஸ்வஸ்ம தேசியத் வலுவூட்டல் திட்டம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது. என மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் வரும் குடும்பங்களின் அஸ்வஸ்ம தேசியத் திட்டத்தின் சமூக வலுவூட்டல் வேலைத் திட்டம் தொடர்பில் மாவட்ட உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டதின் மாவட்ட நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் தலைமையில் செவ்வாய்கிழமை(11.02.2025) பழைய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
5 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்பட உள்ள இதடதிட்டத்தில் வறுமைக் கோட்டில் இருந்து மீண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதே வேலை மாவட்டத்தில் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு பயனாளிகளுக்குரிய மேம்பாட்டு திட்டங்களை புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாகவும் இவர்களை வலுப்படுத்துவது ஆகவே தேசிய ரீதியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, வைத்தியர் இ.ஸ்ரீநாத், எஸ்.எம்.முகமட் நலீம் அரச சமுர்த்தி திணைக்கள மேலதிக பனிப்பாளர் நாயகன் திருமதி பி.அணுலாதேவி அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு பிரதேச செயலாளர் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் என பலரும் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment