போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை(02.02.2024) மாலை வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில் வர்த்தக இராஜாங்க அமைச்சரும் போரதிவுப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமாகிய குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இராசமாணிக்கம் சாணக்கியன், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரதிநிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இதன்போது போரதீவுப்பற்று பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், அரச திணைக்கள மற்றும் அதிகார சபைகளின் தலைவர்கள், வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அப்பிரதேசத்தில் அரசாங்கத்தினால் முன்நெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும், மிக முக்கியமாக உடன் நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் மிக விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக வீதிஅபிவிருத்தி, விவசாயம், போக்குவரத்து, நீர்ப்பாசனம், வாழ்வாதாம், சுகாதாரம், உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
இதில் கலந்து கொண்ட கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது கிராமங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகள் குறித்து கலந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகளிடம் தமது கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
0 Comments:
Post a Comment