9 Mar 2023

களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் சிறுவர் விளையாட்டு விழா.

SHARE

களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் சிறுவர் விளையாட்டு விழா.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் சிறுவர் விளையாட்டு விழா வித்தியாலய அதிபர் ரி.சசிகரன் தலைமையில் புதன்கிழமை(08.03.2023) மாலை களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.சிறீதரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான(திட்டமிடல்) திருமதி.ஜே.பிரியதர்சன், பி.திவிதரன் (கல்வி அபிவிருத்தி) களுதாவளை ஆரம்ப மருத்துவ சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி கே.மயூரேஷன், உதவிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.தயாளசீலன், எஸ்.சுரேஸ்,  மற்றும் கல்வி அதிகாரிகள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநியதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் இதன்போது கலந்து கொண்டனர்.

இததன்போது சிறுவர் அணிநடை, சோடியாக ஓடுதல், கொக்குப்போல் நடத்தல், பந்து அனுப்புதல், பாய்ந்து பாய்ந்து செல்லல், பிராணிகள்போல் நடத்தல், உடல் உஸ்னப் பயிற்சி, தாங்கும் திறன் ஓட்டம், கலப்பு ஓட்டம், உள்ளிட்ட சிறுவர்களின் கண்கவர் விளையாட்டுக்கள் இடம்பெற்றதோடு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான நூறுமீற்றர் ஓட்டமும் இடம்பெற்றன.

இதன்போது கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

























SHARE

Author: verified_user

0 Comments: