24 Nov 2020

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

SHARE

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள  பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள  பிரச்சனைகளை சுகாதார அமைச்சர் மற்றும் பிரதமர், ஜனாதிபதி ஆகியேரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன். 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் திங்கட்கிழமை (23) பிற்பகல் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தலையிலான வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை நிருவாகத்தினரால் இராஜாங்க அமைச்சரிடம், வைத்தியசாலையில் காணப்படும் பௌதீகவளப் பற்றாக்குறை, ஆளணி பற்றாக்குறை உள்ளடங்கலான பல பிரச்சனைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான மகஜர் ஒன்றும் அமைச்சரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

இவ்வைத்தியசாலையில் கடந்த காலங்களிலே  பல்வேறுபட்ட கோரிக்கைகள் சில வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அந்த வேலைத்திட்டங்கள் இன்னும் பூரணப்படுத்தப்படாமல் காணப்படும் நிலை உள்ளது.

இவ்விடயத்தினை சுகாதார அமைச்சர் மற்றும் பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இதன்போது தெரிவித்தார். 













SHARE

Author: verified_user

0 Comments: