25 Jan 2020

ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

SHARE

ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்  மட்டக்களப்பில்அனுஸ்டிக்கப்பட்டது.
திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 14வது நினைவு தின நிகழ்வுகள்  சனிக்கிழமை (25) பி.ப 12.00 மணியளவில் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உயிர் நீர்த்த ஊடகவியலாளர்களின் நினைவுத்துபியிலேயே இந்த நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் யாழ் ஊடக அமையம் என்பன இணைந்து“படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்”என்னும் தொனிப்பொருளில் இந் நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாண  ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ரீ. தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு  மலர் மலை அணிவிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரையாற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்இ மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி. சரவணபவன்இ பிரதி முதல்வர் க.சத்தியசீலன்இ முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்இ  இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் என்.விஸ்னுகாந்தன் உட்பட அரசியல் பிரதிநிதிகள்இ உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள்இ தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பெடி கமகே உள்ளிட்ட சகோதர இன ஊடகவியலாளர்கள்
மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் பலரும்  கலந்துகொண்டிருந்தனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: