கிழக்கு மாகாணத்தின் தமிழ மக்கள் செறிந்து வாழும் கல்முனை வடக்கு பிரதேசத்தில் மிக நீண்ட காலமாகவிருந்து இயங்கிவரும் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்தி பிரதேச செயலகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் அங்கு மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதிவாழ் பொது மக்கள் மிக நீண்ட காலமாகவிருந்து போராடி வருகின்றனர். எனினும் அப்பகுதி மக்களின் நியாயமான போராட்டத்திற்குச் செவிசாய்க்காத அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையிலும், ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் ஆதரவுகளையும். ஊணர்வுகளையும் வெளிக்காட்டும் வகையிலும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் செறிந்து வாழும் அணைத்து பிரதேசங்களிலுமுள்ள வர்த்தக நிலையங்கள், வியாபார இஸ்த்தலங்கள் என்பன திறக்கப்படாமல் வியாழக்கிழமை(20) பூரண கர்த்தால் அனுஸ்ட்டிக்கப்பட்டது.
எனினும் இலங்கைப் போக்குவரத்திற்குச் சொந்தமான போக்குவரத்து போரூந்துகள் சேவையிலீடுபட்டதோடு, தூர இடங்களுக்கான தனியார் போக்குவரத்துக்களும். இடம்பெற்றன. இந்நிலையில் பாடசாலைகளுக்கு ஆசியரியர்கள் சென்றுள்ளபோதிலும் மாணவர்களின் வருகை மிக மிகக் குறைவாகவே காணப்பட்டன, மற்றும்
வீதிகளில் வாகனங்களின்றி வெறிச்சோடிக்காணப்படுவதையும் அவதனிக்க முடிகின்றது. இதனிடையே கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்கள் அனைத்தும் வழமைபோன்று வியாழக்கிழமை (20) இயங்கின.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கடந்த நான்கு நாட்களாக சர்வமத தலைவர்கள் உணவுத்தவிர்ப்ப போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment