1 Nov 2018

மக்களிடையே இயற்கை பசளைப்பாவனையை அதிகரிக்க வேண்டும் - மட்டு. மாவட்ட அரச அதிபர்

SHARE
மக்களிடையே இயற்கை பசளைகள், உரமூட்டிகளின் பாவனை குறைவடைந்துள்ளது. இதில் மாற்றம் ஏற்படவேண்டும். எனவே இராசாயனப் பாவனையைக் குறைத்து நஞ்சற்ற விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அடைச்சகல் நீர்ப்பாசனக் குளத்தின் கீழான விசேட இடைப்போக நெற்செய்கை அறுவடை விழா ஒதியங்குடாறு பிரதேசத்தில் புதன்கிழமை (காலை  நடைபெற்றது. இவ் விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இது அறுவடை விழா அல்ல. இது ஒரு வெற்றி விழா. விவசாயிகளின் முயறசிக்கும், கஸ்டத்திற்கும் கிடைத்த வெற்றியாகவே இதைக் கருதுகிறேன். விவசாய நடவடிக்கைகளுக்கு இந்நாட்களில் செயற்கை இரசாயனங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை உரமூட்டிகளின் பாவனை குறைவாகவே காணப்படுகின்றது.

அதிக விளைச்சலையும் குறுகிய கால விளைச்சலையும் முக்கியமாக கருதுவதனால் மக்களிடையே இயற்கை பசளைகள், உரமூட்டிகளின் பாவனை குறைவடைந்துள்ளது. இதில் மாற்றம் ஏற்படவேண்டும். எனவே இராசாயனப் பாவனையைக் குறைத்து நஞ்சற்ற விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.

இப்பிரதேசத்தில் 200 ஏக்கர் வேளாண்மை செய்கை பரிட்சாத்தமான முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது. இதில், சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஒதியங்குடாறு கமநல அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஐ.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இவ் அறுவடை விழாவில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா உதயகுமார் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்கப்பு கமநல அபிவிருத்தி திணைககள பிரதி ஆணையாளர் எந்திரி ந.சிவலிங்கம், மட்டக்களப்பு பிராந்திய பிரதி நீர்ப்பாசனப்பிரதிப்பணிப்பாளர் (மாகாணம்) எந்திரி வே.இராஜகோபாலசிங்கம், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர், கௌரவ அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெடணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், பொறியியலாளர்கள், கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.  




SHARE

Author: verified_user

0 Comments: