19 Apr 2018

செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

SHARE
மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட்ட பந்தன நவகுண்டபட்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம். 
மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட்ட பந்தன நவகுண்டபட்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (22) அன்று புனர் பூச நட்சத்திரமும், சப்தமி திதியும்,  சித்த யோகமும் கூடிய காலை 9 மணிமுதல் 40 நிமிடம் முதல் 11 மணி 15 நிமிடம் வரையுள்ள மிதுன லக்ன சுபமுகூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

20 ஆம் திகதி காலை 6 மணிமுதல் கர்மாரம்பமும்,  இடம்பெற்று  மாலை 4 மணிமுதல் புண்ணியாகவாசனமும்,  அரவு 8.45 மணி முதல் ஸ்தூலலிங்க ஸ்தூபிஸ்தாபனமும், இடம்பெறவுள்ளது.

21 ஆம் திகதி காலை 6 மணிமுதல் ஆசார்ய சாந்தியும்,  இடம்பெற்று அன்றயதினம் காலை 6 மணிமுதல் பிற்பகல் 7 மணிவரை பக்தர்கள் எண்ணைக்காப்புச் சாத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

மறுநாள் 22 ஆம் திகதி காலை 10.45 நிமிஷத்தில் வேத மந்திர கோஷத்துடன் மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

பிரதிஷ்ட்டா பிரதம சிவாச்சாரியார் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையிலான  குழுவினர் கிரியைகளை மேற்கொள்கின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: