31 Jul 2016

தம்பிலிவிலில் கணவன் வெட்டிக் கொலை மனைவி கைது.

SHARE
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலிவில் கிராமத்தில் சனிக்கிழமை (30) இரவு குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்  ஒரு பிள்ளையின் தந்தையான 42 வயதான தங்கவடிவேல் பார்த்தீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….. 

ஆலையடி வீதி தம்பிலிவில் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த தம்பிரெத்தினம் விஜயராணி என்பவர் ஏற்கனவே திருமணம் செய்து அவரது கணவர் இறந்துள்ளார். அதில் விஜயராணிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பின்னர் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த பார்த்தீபன் என்பவரை விஜயராணி இரண்டாவது தாரமாக மணம் முடித்துள்ளார் அதில் இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. 

பார்த்தீபன் வெற்றிலை வியாபாரம், வேளாண்மை செய்தல் மற்றும் சோளம், மிளகாய், போன்ற மேட்டு நிலப் பயிர்களைச் செய்து வரும் விவசாயியாவார்.

இந்நிலையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நீண்ட நாட்களாகவிருந்து தகராறுகள் இடம்பெற்று வந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவதினமான சனிக்கிழமை (30)  பார்த்தீபன் தம்பிலிவில் புதிதாக வாங்கிய வளவு ஒன்றினை துப்பரவு செய்து விட்டு கடையில் உணவுகளை வாங்கிக் கொண்டு மனைவி மக்களுடன் உண்டு விட்டு இரவு 9 மணியளவில உறங்கியுள்ளார். இந்நிலையிலேயே மனைவி கணவனின் கழுத்தை கோடரியால் கொத்திக் கொலை செய்துள்ளார்.

இதன்போது இதன்போது உயிரிழந்த பாரத்தீபனின் மனைவியான விஜயராணி வயது 46 என்பவரை பொலிசார் சந்தேகத்தின் போரில் கைது செய்துள்ளனர். சடலம் தற்போது திருக்கோவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

SHARE

Author: verified_user

0 Comments: