
பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் மகிழூர் சரஸ்வதி வித்தியாலய மாணவி சாதனை படைத்துள்ளார் 2016 ஆண்டிற்கான மாணமட்ட போட்டிகள் தற்போது கந்தளாயில் நடைபெற்று வருகின்ற நிலையில், 15 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான பரிதிவட்டம் வீசுதல் போட்டியில் பங்குபற்றிய மாணவி இ.துஜாயினி இரண்டாம் இடத்தினைப் பெற்று குறித்த சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
சாதனையை நிலைநாட்டிய மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், பயிற்றுவித்த ஆசிரியர், மற்றும் சகல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக வித்தியாலய அதிபர் ந.புட்பமூர்த்தி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment