11 Jan 2016

பொங்கல் விழா

SHARE
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை நடத்தும் 'இனிய உறவுக்குள் இனிப்பான பொங்கல் விழா -2016' எதிர்வரும் 17ஆம் திகதி பிற்பகல்  2.30 மணிக்கு கல்முனை ஆர்.கே.எம்.பாடசாலை
மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பேரவையின் நிறுவுனரும் தலைவருமான தேசமான்ய ஜலீல் ஜீ தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் கலந்துகொள்ளவுள்ளார். இங்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்;ட விரிவுரையாளர்  கலாநிதி அனுஷியா சேனாதிராஜா சிறப்புரை ஆற்றவுள்ளார். மேலும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் முதுகவிஞர் கலாபூஷணம்  மு.சடாட்சரன் தலைமையில்  'பொங்குக  புதுப் பொங்கள்' என்ற தலைப்பில் சிறப்புக் கவியரங்கம்; நடைபெறவுள்ளது.

இக்கவியரங்கில் கலாபூஷணம் பொன்சிவானந்தன், கலாபூஷணம் அக்கரைப்பாக்கியன், கலாபூஷணம் தம்பிலுவில் தயா,கலாபூஷணம் கவிப்புனல் கே.எம்.ஏ.அஸீஸ், கலாபூஷணம் புன்னகைவேந்தன், கவிஞர் தனிஸ்கரன், கவிஞர் பூவை சரவணன், கவிதாயினி பற்றூர் பரமேஸ்வரி ஆகியோர் கவிதை பாடவுள்ளனர். இவ்விழாவில் கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்வுகளுடன் நூலங்காடியும் விற்பனையும் இடம்பெறவுள்ளது.  
SHARE

Author: verified_user

0 Comments: