முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட அவர், தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிள்ளையானை இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, மட்டக்களப்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment