9 Nov 2015

கிழக்கு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள ICE - 2016

SHARE
கிழக்கு பல்கலைக்கழகம்  நான்காவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள ICE - 2016 சர்வதேச மாநாடு எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10- 11ஆம் திகதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
புதிய விடயங்களை இணைப்பதனூடாக  நவீன அறிவு மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்துள்ள இச்சர்வதேச மாநாடானது 'ஒருமைப்பாட்டினூடாக அறிவை மேம்படுத்தல்' என்ற தொனிப்பொருளில் நடத்தப்படுகிறது.
தேசிய மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள், கல்விமான்கள் மற்றும் பங்குதாரர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கிடையில் அறிவு, அனுபவம் என்பவற்றை பகிர்ந்துகொள்ள இம்மாநாடு வாய்ப்பாக அமையும்.

SHARE

Author: verified_user

0 Comments: