20 Oct 2015

மருதமுனை சுவேடோ- ஸ்ரீலங்கா நடாத்திய தரம் 05 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

SHARE
மருதமுனை சமூக நலன்புரி அபிவிருத்தி அமைப்பு (சுவேடோ- ஸ்ரீலங்கா) தரம் 05 மாணவர்களுக்கு நடாத்திய முன்னோடி பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 16.10.2015 அன்று மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் எம்.ரீ.எம்.ஹாறூன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக மாநகரசபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், ஏ.எல்.எம்.முஸ்தபா மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், பிரதேசசெயலாளர் எம்.எச்.முகம்மட் கனி, மக்கள் வங்கி முகாமையாளர் பி.ரீ.நஸ்றுத்தீன், விசேட அதிதியாக திவிநெகும வங்கி முகாமையாளர் எம்.எம்.எம். முபீன், சட்டத்தரணி எம்.ஏ.எம்.முபீத் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக சீ.ஐ.சி சந்தைப்படுத்தல் முகாமையாளர்களான கே.எம்.சுக்ரி, எம்.பி.ஏ.பௌக் மற்றும் ஆயள்வேத வைத்தியர் பி.எம்.சுகைப்தீன், அல்-மதீனா வித்தியாலைய அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துள்ளா ஆகியோரும் கலந்து கொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: