11 Aug 2015

கொடுவா மீன் வளர்ப்புத் திட்டம்

SHARE

மட்டக்களப்பு, நாவலடி வாவியில் கூண்டுகளில் கொடுவா மீன்களை வளர்க்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் 06 மாதங்களில் மொத்த வருமானமாக மீனவர் ஒருவருக்கு சராசரி இரண்டு இலட்சம் ரூபாய் கிடைப்பதாக இந்த மீன் வளர்ப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள க.அருள்நாதன் தெரிவித்தார்.
விவசாய அபிவிருத்தி மூலம் வறுமையை குறைத்தல் எனும் தொனிப்பொருளில் வாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கொடுவா மீன்களை வளர்க்கும் திட்டம் நாவலடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் ஒன்பது மீனவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒன்பது கூண்டுகளில் கொடுவா மீன்கள் வளர்க்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி 370 கொடுவா மீன்குஞ்சுகள் கூண்டுகளில் விடப்பட்டு நான்கு மாதங்களான நிலையில், தற்போது 300 மீன்கள் உள்ளன. 06 மாதங்களின் பின்னரே இதன் அறுவடை மேற்கொள்ளப்படுகின்றது.
அறுவடைக் காலத்தின்போது மீன் ஒன்று சுமார் 1,500 கிராம் நிறைவரை காணப்படும் எனவும் அவர் கூறினார். இந்த மீன்களின் இரைக்காக ஒவ்வொரு மீனவரும் சராசரி; 300 ரூபாய் செலவிடுவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். தங்களிடம் இந்த மீன்களை ஏற்றுமதி செய்யும் கம்பனிகள் ஒரு கிலோ கொடுவா மீன்களை; 600 ரூபாயக்கு கொள்வனவு செய்வதாகவும் இதனால், மீனவர் ஒருவருக்கு மொத்த வருமானமாக சராசரி இரண்டு இலட்சம் ரூபாய் கிடைப்பதாகவும் அவர் கூறினார்
SHARE

Author: verified_user

0 Comments: