மட்டக்களப்பு போதானா வைத்தியாசாலையில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாக மட்டக்களப்பு 231 இராணுவப்படை கட்டளைத் தலைமையகத்தினால் இரத்ததான முகாம் ஒன்று நேற்று (29) நடத்தப்பட்டது.
இந்த இரத்ததான முகாமில், இராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் ஆகியோர் மட்டக்களப்பு போதானா வைத்தியாசாலை இரத்த தானம் செய்தனர்.
231 இராணுவப்படை கட்டளைத் தலைமையகத்தின் உயர் அதிகாரியான மேஜர் எல்.பி.எஸ்.யு.கே. லியனகெதர மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தான பிரிவின் வைத்தியர் எச்.டப்ளியூ.ஏ.ஐ.கருணாசேன ஆகியோரின் தலைமையில் இந்த இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
0 Comments:
Post a Comment