9 Feb 2015

திருகோணமலை பஸ் நிலையத்தில் ஆசனப்பதிவு அலுவலகம் திறந்து வைப்பு

SHARE
கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் யோசனைக்கமைய திருகோணமலை பஸ் நிலையத்தில் தனியார் பேரூந்து ஆசனப்பதிவு அலுவலகம் இன்று (09) காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வலுவலகத்தில் ஆசனப்பதிவு ஏனைய அலுவலக நடவடிக்கைகள் உட்பட டிஜிட்டல் திரையிலான பஸ் போக்குவரத்து சேவை கால நேர அட்டவணை ஒன்றும் காணப்படுகின்றது. இதன் மூலம் பயணிகள் தங்களுக்கு தேவையான போக்குவரத்து தொடர்பான சேவைகளை சிறப்பாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்.

இக்கட்டிடம் அமைப்பததற்காக 18 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன் இதற்கான நிதி கிழக்கு மாகாண சபை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உள்நாட்டுப் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக், கிழக்க மாகாண அமைச்சர் விமலவீர திஸாநாயக்க,  கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஷ்பக்குமார உட்பட அதிகாரிகள்  அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.
SHARE

Author: verified_user

0 Comments: