4 Dec 2023

அகில இலங்கை கர்நாடக சங்கீத பரத நாட்டியப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் சாதனை.

SHARE

அகில இலங்கை கர்நாடக சங்கீத பரத நாட்டியப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் சாதனை.

அனுராதபுரம் மத்திய கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கர்நாடக சங்கீத பரதநாட்டியப் தேசியமட்டப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து கலந்து கொண்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

அந்த வகையில் களுதாவளை மகாவித்தியலயம் தேசியபாடசாலை சிரேஸ்ட பிரிவு ஒன்றில் தப்பாட்டம் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவர்கள் பரதநாட்டியப் சிரேஸ்ட பிரிவு ஒன்றில் சுதந்திரம் எனும் தலைப்பில் நடைபெற்ற புத்தாக்க நடனப் போட்டியில் இரண்டாம் இடம்இடத்தைப் பெற்றுள்ளனர்.

பெரியபோரதீவு பாரதி மகாவித்தியாலயம் வேடுவர் நடனம் இரண்டாம் இடத்தையும், தைந்நீராடல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.

செட்டிபாளையம் மகாவித்தியாலம் இசைகுழு நாட்டார் பாடலில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இசை பிரிவு ஐந்தில் கலந்து கொண்ட களுதாவளை மகாவித்தியலயம் தேசியபாடசாலையைச்; சேர்ந்த ஜெ.டிலோஜி எனும் மாணவி மூன்றாம் இடத்தையும், பெற்றுள்ளதோடு, வயலின் போட்டியில் கலந்து கொண்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவர்களான நி.மோரக்ஸகா, முதலிடத்தையும், சி.அத்விகா இரண்டாமிடத்தையும், பெற்றுள்ளனர்.

பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள இப்பாடசாலைகளுக்கும் கிராமங்களுக்கும், கல்வி வலையத்திற்கும் இவ்வாறு தேசியமட்டப் பரதநாட்டிய கர்நாடகப் சங்கீதப் போட்டிகளில் பங்கேற்று சாதனைகளை நிலைநாட்டிக் கொடுத்துள்ள மாணவர்ளுக்கும், மாணவர்களை ஊக்குவித்த அதிபர்கள், மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர், மற்றும் கல்விச் சமூகத்தின் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.









 

SHARE

Author: verified_user

0 Comments: