26 Jul 2023

களுதாவளை மகா வித்தியாலயத்தில் தொழில் முனைவோர் வட்டங்களை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பம்.

SHARE

களுதாவளை மகா வித்தியாலயத்தில் தொழில் முனைவோர் வட்டங்களை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை மகா வித்தியாலயாலயம் தேசிய பாடசாலையில், கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் இலங்கை பூராக நடைபெற்று வரும் பாடசாலைகளில்தொழில் முனைவோர் வட்டங்களை உருவாக்குதல்எனும் நிகழ்ச்சி திட்டம் புதன்கிழமை(26.07.2023)  நடைபெற்றது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக மாணவர்களுக்கு தொழில் முனைவோர் வட்டம், இலங்கை மத்திய வங்கியின் நிதியில், தூய நாணயக் கொள்கை, உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில்  இதன்போது இலங்கை மத்திய வங்கி மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டன்.

பாடசாலையின்  அதிபர் .சத்தியமோகனின நெறிப்படுத்தலின் பிரதி அதிபர் திருமதி.சுகன்யா சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்தி முகாமையாளர் .பிரபாகரன், மத்திய வங்கியின் திருகோணமலை முகாமையாளர் .எம்.நிரோஷன், மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி.கௌசல்யா ஸ்ரீகாந்தன் வியாபார மேம்படுத்தல் உத்தியோகஸ்தர் நா.கோகுலதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இதன்போது வேலை வாய்ப்பை எதிர்பார்த்து படிக்கும் ஒரு நபரை அல்ல, நாட்டில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வுகளை வழங்கும் வேலைவாய்ப்பை உருவாக்குபவரையே பாடசாலையிலிருந்து சமூகத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சவால்களுக்கு பதில் வழங்கும் வர்த்தக வாய்ப்பாக மாற்றக்கூடிய சிறந்த இலங்கையரை உருவாக்கும் நோக்குடன், இச்செயற்பாடு முன்நெடுக்கப்படுகின்றது.

இவ்வாறு தொழில் முயற்சியில் ஈடுபடும் மாணவர் சமூமாயத்திற்கு எதிர்காலத்தில், வெண்கலப்பதக்கம், வெள்ளி பதக்கம், தங்கப் பதக்கம், ஜனாதிபதி விருது, வழங்கும் செயற்பாடுகளும் காத்திருக்கின்றதாக இதன்போது  வியாபார மேம்படுத்தல் உத்தியோகஸ்தர் நா.கோகுலதாஸ் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: