14 Dec 2022

விவேகானந்த தொழில் நுட்பவியல் கல்லூரியின் 10 வருட நிறைவு விழாவும், “பாசறை - 02” நூல் வெளியீடும்.

SHARE

விவேகானந்த தொழில் நுட்பவியல் கல்லூரியின் 10 வருட நிறைவு விழாவும், “பாசறை - 02” நூல் வெளியீடும்.

மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இயங்கிவரும், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் 10 வருட நிறைவை விழாவும், “பாசறை - 02” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வும், கல்லூரியில் செவ்வாய்கிழமை (13) நடைபெற்றது.

இதில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மகராஜ் அவர்களும் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரார்ச்சிதானந்தஜீ மகராஜ் அவர்களும் கலந்து கொண்டதோடு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், ஓய்வுபெற்ற மேலதிக செயலாளர் எஸ்.பாஸ்கரன், தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் பாஸ்கரன், பாடசாலை அதிபர்கள் நன்கொடை நிறுவன தலைவர்கள், பணியாளர்கள், பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் கா.பொ. சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் கல்லூரியின் நீண்ட காலமாக ஆலோசனை வழங்கிய மற்றும் சேவையாளராக இருந்தவர்கள், பயிற்சியின் போது மேலதிக திறன்களை வெளிப்படுத்திய பயிலுனர்கள், உள்ளிட்ட பலருக்கம் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதன்போது 10 வது வருட நினைவு மலரானபாசறை 2” எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

காலத்தின் தேவைக்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்தி பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கும் இக்கல்லூரியின் பத்து 10 வருட காலத்தினுள் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தொழில்கல்வியை வழங்கி தொழில்களைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாகவும், எதிர்காலத்தில் தொழில் முயற்சியாளர்கள்,  தொழில் வல்லுனர்களை உருவாக்குவதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும், உயர் கற்கைகளுற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்காக மேலதிக பயிற்சிகளை உள்வாங்கவிருப்பதாகவும் இக்கல்லூரியின் பணிப்பாளர் .பிரதீஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: