9 Nov 2022

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திற்கு செல்லும் வலையிறவு பாலம் வீதி நீரில் முழ்கியுள்ளது.

SHARE

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திற்கு செல்லும் வலையிறவு பாலம்  வீதி நீரில் முழ்கியுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக மட்டக்களப்பு நகரையும் மண்முனை மேற்கு பிரதேசத்தையும் இணைக்கும்  வலையிறவு பாலத்தின் வீதியின் ஒரு பகுதி கடந்த இரு நாட்களாக நீரில் முழ்கியுள்ளது.

மட்டக்களப்பு நகரில் இருந்து மேற்கே மண்முனை மேற்கு பிரதேசத்தற்கு செல்லும் பிரதான பாதை இதுவாகும். இவ்வீதி ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் மக்களின் பயணங்கள்  பெரும் சிரமத்துடன் மேற்கொண்டு வருவதனை காணமுடிகின்றது.

புதன்கிழமை(09)  பிற்பகல் இவ்வீதியால் சுமார் இரண்டு அடி நீர் ஊடறுத்து செல்வதன  காணமுடிகின்றது. இதனால் முச்சக்கரவண்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் பெரும் அசெளகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்யும்பட்சத்தில் உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் மேலும் திறக்கப்படுமானால்  இவ் வீதியின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கரிக்கப்பட்டு மக்களின் போக்குவரத்தும் மேலும் பாதிப்படைவதற்கு வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.




  

 

SHARE

Author: verified_user

0 Comments: