18 Jul 2022

முஸ்லிங்களின் பிரச்சினையை தீர்க்க சிறந்த வாய்ப்பாக இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் : முஸ்லிம் எம்.பிக்களுக்கு கோரிக்கை

SHARE

(நூருல் ஹுதா உமர்)


முஸ்லிங்களின் பிரச்சினையை தீர்க்க சிறந்த வாய்ப்பாக இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் : முஸ்லிம் எம்.பிக்களுக்கு கோரிக்கை.இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை சேர்ந்த எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சிகளின் விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்துவைத்தும் சக்தியும், ஆளுமையும், எண்ணமும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க முன்வர வேண்டும் என சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது.

அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா விடுத்துள்ள அறிக்கையில் மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி போன்ற தமிழ் மக்களின் சக்திமிக்க அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் செய்துவரும் நிலையில் முஸ்லிம் கட்சிகள் வழமை போன்று கண்களை மூடிக்கொண்டு வாசிக்கு வலைவீசாமல் நிதானித்து முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர ஆராய்ந்து முடிவெடுக்க சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாக இந்த சூழ்நிலையை அடிக்கோடிட்டு காட்ட விரும்புகிறோம்.

முஸ்லிம் சமூகத்தின் காணி மற்றும்நிலப்பிரச்சினைகள்பிராந்திய பிரச்சினைகள்உரிமை சார்ந்த விடயங்கள் என இலங்கையின் சகல பாகங்களிலும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கிறதுஅவற்றை பட்டியலிட்டு அந்த பிரச்சினைகளை எழுத்து மூலம் ஒப்பந்தம் செய்து வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கின்றமுஸ்லிங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஆற்றலும்எண்ணமும் உள்ள வேட்பாளர்களை அணுகி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை முன்னுதாரணமாக கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம் என தெரிவித்துள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: