11 Jun 2022

செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு.

SHARE

செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு.

கிழக்கிங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உத்சவம் வெள்ளிக்கிழமை(10) இரவு கதவு திறத்தவுடன் ஆரம்பமாகியது.

வெள்ளிக்கிழமை(10) கதவு திறத்தல் சடங்கு கிராங்குளம் கிராம மக்களாலும்சனிக்கிழமை பகற்சடங்கு குருக்கள்மடம் கிராமமக்களாலும்சனிக்கிழமை இரவுச் சடங்கு மாங்காடு கிராமமக்களாலும்ஞாயிற்றுக்கிழமை பகல் கல்யாணச் சடங்கு  தேற்றாத்தீவு கிராம மக்களாலும்ஞாயிற்றுக்கிழமை இரவு பூரண கும்பச்சடங்கு செட்டிபாளையம் கிராம மக்களாலும்திங்கட்கிழமை பகற் சடங்கு களுதாவளை கிராம மக்களாலும்திங்கட்கிழமை பின்னிரவு திருக்குளிர்த்திச் சடங்கு களுதாவளை மக்களாலும் நடாத்தப்படவுள்ளன.

வருடாந்தம் மேற்படி ஆறு கிராம மக்களால் மிகவும் தொன்று தொட்டு இக்கண்ணகை அம்மன் ஆலத்தில் சடங்குகள் இடம்பெற்று வருகின்றனசிவஸ்ரீ.கு.தேவராசா தலைமையிலான கட்டாடியார் தலைமையில் சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

சடங்கு காலத்தில் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி கண்ணகை அம்மன் வழங்குரை படித்தல் இடம்பெற்று வருகின்றமைகும் சிறப்பம்சமாகும்.

கடந்த இரண்டு வருடங்களாக இவ்வாலயத்தில் கொவிட் நிலமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களைக் கொண்டு சடங்குகள் இடம்பெற்று வந்த நிலையில் இம்முறை அது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அதிகளவு பக்கதர்கள் கலந்து கொண்டுள்ளனர்.




























SHARE

Author: verified_user

0 Comments: