26 May 2022

மட்டக்களப்பில் எரிவாயுக்காக காத்திருந்த மக்கள் எரிவாயு லொறியை மறித்து ஆர்பாட்டம்.

SHARE

மட்டக்களப்பில் எரிவாயுக்காக காத்திருந்த மக்கள் எரிவாயு லொறியை மறித்து ஆர்பாட்டம்.

மட்டக்களப்பு நகரில் பயினியர் வீதியில் எரிவாயுக்காக காத்திருந்த பாவனையாளர்கள் 250 பேருக்கு மட்டும் எரிவாயு வழங்கிவிட்டு செல்ல முற்பட்ட லொறியை எரிவாயுவை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்து அதனை பெறதாக  பாவனையாளர்கள்  லொறியை மறித்து தமக்கு எப்போது எரிவாய தரப்படும் என உறுதிப்படுத்துமாறு கோரி மக்கள் திங்கட்கிழமை(23)  மாலை  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை எரிவாயுவை பெறுவதற்காக சுமார் 800 பேர்வரையிலான மக்கள் பயினியர் வீதியில் வரிசையில் காத்திருந்தனர் இதில் அன்றைய தினம் எரிவாயு முகவர்களால் 400 பேருக்கு எரிவாயுக்களை வழங்கப்பட்டது இந்த நிலையில் வரிசையில் காத்திருந்த ஏனையவர்கள் எரிவாயுவை பெறாது தொடர்ந்து மாலைவரை காத்திருந்து வீடுகளுக்கு சென்றனர்.

 

இந்த நிலையில சனிக்கிழமை எரிவாயு வழங்கப்படும் என அன்று அதிகாலை 3 மணி தொடக்கம் வீதியில் வெற்றுச் சிலிண்டர்களுடன் மக்கள் காத்திருந்தனர் ஆனால் அன்றும் வழங்கப்படாதைதயடுத்து தொடர்ந்து இரவு பகலாக  திங்கட்கிழமை வரை மக்கள் வரிசையில் காத்திருந்தனர் 

இவ்வாறான நிலையில் திங்கட்கிழமை மாலை முகவர்களால் லொறியில் கொண்டுவரப்பட்ட 250 எரிவாயுக்களை வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வழங்கிமுடித்தனர் வரிiசையில் காத்திருந்த ஏனைவர்கள் எரிவாயுவை பெறாத நிலையில் எரிவாயு தந்தால் தான் லொறி இங்கிருந்து செல்ல அனுமதிக்க முடியம் என வரிசையில் காத்திருந்த மக்கள் லொறியை வெளியேறிச் செல்லவிடாது மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த பொலிசாரிடம் ஆர்பாட்டகாரர்கள் எரிவாயு தரப்படும் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு இலக்கம் வழங்குமாறும் கோரி லொறியை செல்லவிடாது சுற்றிவளைத்து இருந்தனர் இதனை தொடர்ந்து பொலிசார் எரிவாயு முகவருடன் பேசி புதன்கிழமை எரிவாயு தருவதாகவும் அதற்காக வரிசையில் நிறப்பவர்களுக்கு இலக்கங்கள் முகவர்களால் தரப்படும் என தலையீடு செய்து உறதி மொழியையடுத்து லொறி அங்கிருந்து செல்ல ஆர்பாட்டகாரர்கள் அனுமதியளித்தனர்

இருந்தபோதும் தொடர்ந்து அங்கு எரிவாயு சிலிண்டர்களுடன் தொடர்ந்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.










 

SHARE

Author: verified_user

0 Comments: