3 Mar 2022

சுதந்திரக்கிண்ண உதைப்பந்தாட்டம்.

SHARE

சுதந்திரக்கிண்ண உதைப்பந்தாட்டம். 

சுதந்திரக்கிண்ண உதைப்பந்தாட்டம்  சிலோன் காற்பந்தாட்ட லீக்  போட்டியின் இரண்டாவது அரை இறுதி போட்டி செவ்வாய்கிழமை (01) மாலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

'சுதந்திரக்கிண்ண உதைப்பந்தாட்டம்  சிலோன்" இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வத் உம்மர் தலைமையில் உதைப்பந்தாட்ட லீக் போட்டிகள் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட  8 மாகாண அணிகளுக்கிடையில்  இரண்டு நாள் லீக் போட்டிகளாக மாகாண மட்டத்தில்  நடைபெற்றது.

வளர்ந்து வருகின்ற உதைப்பந்தாட்ட வீரர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக மாகாணங்களுக்கிடையில் தெரிவு போட்டியாக  உதைப்பந்தாட்ட  லீக் போட்டிகள்  தொடர்ச்சியாக அனைத்து மாகாணங்களிலும்> மாவட்டங்களிலும் நடைபெற்றுவந்த நிலையில் கிழக்குமாகாணத்தின்   மட்டக்களப்பு மாவட்ட  உதைப்பந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.காந்தன் ஒருங்கிணைப்பில்  சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்றைய தினம் (01) நடாத்தப்பட்ட  இறுதி போட்டி தெரிவுக்கான அரையிறுதி  போட்டியில்  வடமாகாண மற்றும்  கிழக்குமாகாண அணிகள் மோதிக்கொண்டன

இதன்போது  இரண்டு அணிகளும் எந்தவொரு கோல்களை  பெறாத நிலையில்  கடந்த வாரம்  வடமாகாணத்தில் நடத்தப்பட்ட முதலாவது அரையிறுதிப் போட்டியின்  அடிப்படையில் புள்ளியை  அடிப்படையாக கொண்டு வடமாகாண அணி  இறுதி போட்டிக்காக தெரிவு  செய்யப்பட்டுள்ளது.

இதன்போது நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டி நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்> பிரதேச செயலாளர் வி.வாசுதேவன்> மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வரும்  மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின்  உபதலைவருமான  கந்தசாமி சத்தியசீலன்> 231 வது  இராணுவ படை பிரிவு  கட்டளை அதிகாரி திலுப்ப பண்டார> மாவட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் உட்பட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

 









SHARE

Author: verified_user

0 Comments: