25 Mar 2022

அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.

மாவட்ட மட்ட அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (24) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.சுதாகரன், பிரதேச செயலாளர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது அனர்த்தங்கள் இடம்பெறும்போது குறித்த தகவல்களை எவ்வாறாக பொது மக்களுக்கு அறியத்தருவது தொடர்பாகவும் சுனாமி எச்சரிக்கைகளை விரைவாக மக்களுக்கு தெரியப்படுத்துவது மற்றும் அனர்த்த வேளைகளில் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டு எவ்வாறான பிரதேசங்களுக்கு பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்த்தல் தொடர்பாகவும், அவ்வாறு பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் தேவைப்பாடுகளை நிவர்த்திப்பது மற்றும் அவ்வாறான தேவைகளை எவ்வாறு நிவர்த்திப்பது என்பவை தொடர்பாக இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








SHARE

Author: verified_user

0 Comments: