25 Feb 2022

களுதாவளையில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றை திறப்பதற்கு உத்தேசம்- Dr.ஜி.சுகுணன்.

SHARE

களுதாவளையில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றை திறப்பதற்கு உத்தேசம்- Dr.ஜி.சுகுணன்.

பல விடையங்களில் எமது சங்கத்திற்கு ஆதரவுகள் தேவையாகவுள்ளது. கூட்டுறவுச்சங்கங்கள் ஒரு காலத்தில் திருடர்களின் கூடாரமாக ஒரு காலத்தில் முத்திரை குத்தப்பட்டிருந்தது. அந்த கழங்கத்திலிருந்து மிக நீண்ட காலமெடுத்திருந்தது. என மன்முனை தென் எருவில் பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் வியாழக்கிழமை(24) மாலை திறந்து வைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் 17 வது கோப் பிறஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டம் மன்முனை தென் எருவில் களுவாஞ்சிகுடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தலைமையில் வியாழக்கிழமை(24) மாலை இடம்பெற்ற கோப் பிறஸ்  திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கோப் பிறஸை திறந்து

எமக்காக நாமே என்ற ஒன்றிய வாழ்வியல் தத்தவத்தில் உருவாக்கப்பட்டது கூட்டுறவாகும். பின்னர் வந்த காலத்தில் கூட்டுறவுத்துறையின் வீழ்ச்சியும், அதன் எழுற்சியும், வரலாற்றில் எழுதப்பட்டிருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் மிகுந்த அடிமட்டத்திற்குச் சென்றிருந்த இந்த கூட்டுறவுத்துறையானது, இந்நாட்டில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளம் பெற்று வருவதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். இது நாட்டின் ஏனைய மாகாணங்களில் மீண்டெழுந்திருந்தாலும் எமது கிழக்கு மாகாணத்தில் சற்று தாமதாமாக மீண்டெழுவதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதே ரீதியில்தான் எமது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கூட்டுறவுச்சங்கமும் திகழ்கின்றது.

கடந்த 5 வருடத்திற்கு முன்னர் தலைவராக இச்சங்கத்தைப் பொறுப்பேற்றபோது சங்கத்திலுள்ள உத்தியோகஸ்த்தர்களுக்கு மாதாந்த சம்பளத்தைக்கூட வழங்க முடியதா நிலமைதான காணப்பட்டிருந்தது. தற்போது 10 லெட்சத்திற்கு அதிகமான நிலுவையான சம்பளத் தொகையை வழங்கி முடித்திருக்கின்றோம். தற்போது 80 லெட்டசத்திற்கு அதிகமான தொகையை எமது இருப்பாக வைத்துள்ளோம்கடந்த காலங்களில் இயற்காமலிருந்த கிராமிய வங்கிளை இயங்கச் செய்திருக்கின்றோம். அதனூடாக விவசாயக்கடன், சுயதொழில் கடன், அரச உத்தியோகஸ்த்தர்களுக்கான கடன் வசதிகளையும் வழங்கி வருகின்றோம்.  நாம் விரைவில் களுதாவளைப் பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றை திறப்பதற்கு உத்தேசித்துள்ளோம்.

இப்பிரதேசத்தில் விவசாய உற்பத்திகள் அதிகம் காணப்பட்டாலும் அதற்குரிய ஒருங்கிணைப்பு இங்கு காணப்படவில்லை,  அதனை மேம்படுத்த வேண்டியிருக்கின்றது. அந்த வகையில் பல விடையங்களில் எமது சங்கத்திற்கு ஆதரவுகள் தேவையாகவுள்ளது. கூட்டுறவுச்சங்கங்கள் ஒரு காலத்தில் திருடர்களின் கூடாரமாக ஒரு காலத்தில் முத்திரை குத்தப்பட்டிருந்தது. அந்த கழங்கத்திலிருந்து மிக நீண்ட காலமெடுத்திருந்தது. இந்நிலையில் நாம் எதிர்காலத்தில் புதிய பாதையில் வித்தியாசமான சிந்தனைக் கோணத்தில், இங்குள்ள வளங்களைக் கொண்டு திட்டங்களைத் தீட்டவேண்டியவர்களாக இருக்கின்றோம். எனவே திணைக்களத்தின் ஆதரவைப் பற்றிக் கொண்டு சங்கங்கள் முன்னேற வேண்டிய காலம் இது. எதிர்காலத்தில் எமது மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கம் எதிர்காலத்தில் வெற்றி நடைபோடும் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.       








                                          

SHARE

Author: verified_user

0 Comments: