4 Feb 2022

ஹட்டனில் போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் மாபெரும் கல்விமறுமலர்ச்சி நிகழ்வு

SHARE

(ரகு)

ஹட்டனில் போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் மாபெரும் கல்விமறுமலர்ச்சி நிகழ்வு.

போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்குகின்ற மாபெரும் வைபவம் ஹட்டன் ம.மா/ஹ/ குயில்வத்தை தமிழ் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் எம். வேல்முருகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மலையகமக்களின் மறுமலர்சிமிக்க கல்விக்கான பயணத்தில் ஆளுமையோடு முன்னின்றுசெயற்படும்ஆன்மீக அறங்காவலரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவரும்,

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான  அதிவண/ பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ (J.P. Whole lsland) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

 இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க, வேர்ல்ட் விஷன் ஸ்ரீலங்காவின் செயற்றிட்ட முகாமையாளர்

மனோஜ் ஜூட் தவராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், ஹட்டன் ஹைலன்ஸ் தேசிய பாடசாலையின் ஆசிரியர்களான டீ. ஜஸ்டீன் செல்வகுமார், என்.முருகானந்தன் மற்றும் மத விவகாரங்களுக்கான செயலாளரின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் (FFSL.REFEREE) ஏ.டீ. முரளி, நோர்வூட் பிரதேசத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நிசாரியேஸ் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர். மலையக மக்களின் எதிர்கால கல்வி வளர்சிக்கான காத்திரமான பயணத்தில் இந்நிகழ்வு வரலாற்றுசிறப்புமிக்கநிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.















SHARE

Author: verified_user

0 Comments: