12 Dec 2021

ஐனாதிபதிக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் ஊடாக மகஜர் சமர்ப்பிப்பு.

SHARE

ஐனாதிபதிக்கு  மாகாண ஆளுனர் அலுவலகம் ஊடாக மகஜர் சமர்ப்பிப்பு.

சர்வதேச மனித உரிமை தினத்தினை முன்னிட்டு வாகன பேரணியாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சர்வோதயம் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் வரை சென்று ஐனாதிபதி அவர்களுக்கான மகஜர் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் ஊடாக  அனுப்பப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் சர்வோதயா நிலையத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என 367 பேர் கலந்து கொண்டு தங்களுக்கு இருக்கக் கூடிய உரிமைசார் பிரச்சினைகளை பதாதைகள் ஊடாகவும் கோசங்கள் ஊடாகவும் வெளிப்படுத்தி இருந்தனர்.

மூவின  மக்களும் இணைந்து சமாதானம் மற்றும்  நல்லிணக்கம் மலர வேண்டும் என்ற நோக்கில் வெள்ளைப் புறா மூலம் வெளிப்படுத்தி இருந்தனர்.

மக்கள் பேரணியானது திருகோணமலை சர்வோதயம்( நிலாவெளி வீதி ஊடாக 03ம் கட்டை பகுதியை அடைந்து மீண்டும் கண்டி வீதிக்குச் சென்று அபயபுரம் சந்தி ஊடாக இலிங்கநகர் ஊடாக  உவர்மலை பிரதேசத்திற்குச் சென்று பேரணியானது இறுதியாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம்  வரை சென்றது.

அங்கு சென்ற  மக்கள் தங்களால் மேன்மை தங்கிய சனாதிபதிக்கு தயாரித்து அனுப்பவிருந்த மகஜர் ஆளுனர் அவர்களின் வேண்டுதல்களுக்கும் உகரிசனைளக்கும் அமைவாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் திட்டமிடல் அதிகாரி அவர்கள் ஊடாகப் பெற்று  சனாதிபதிக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில  மொழிகளில் அனுப்பப்பட்டது.

மக்கள்  தங்களுக்கு இருக்கின்ற  உணவினைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை இல்லை எனவும்,  அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை  உடன் நிறுத்தக் கோரியும்,தங்களது குடியிருப்பு மற்றும் வாழ்வாதார நிலங்கள் அரசினால் சபீகரிக்கப்பட்டமை, அடிப்படை உரிமைகளை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகளை உடன்  நிறுத்தக் கோரியும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிய செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.






















               

SHARE

Author: verified_user

0 Comments: