10 Oct 2021

பெரும்போக வேளான்மைச் செய்கைக்குரிய வேலைகள் ஆரம்பம்.

SHARE

பெரும்போக வேளான்மைச் செய்கைக்குரிய வேலைகள் ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய நிலையில் பரவலாக மழையை நம்பி வேளாண்மைச் செய்யும் பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குரிய ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் பெரும்போக வேளாண்மைச் செய்வதற்குரிய வயல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கோடை காலம் முடிவுற்று தற்போது அவ்வப்போது தலை மழை பெய்யத் தொடங்கியதையடுத்து பெரும்போக வேளாண்மைச் செய்வதற்குரிய அருகு கொத்துதல், வரம்பு கட்டுதல், உழவு செய்தல் போன்ற ஆரம்ப வேலைகளை விவசாயிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இம்முறை அப்பிரதேசத்தில் சுமார்  19069 இற்கு மேற்பட்ட வயற்காணிகளில் பெரும்போக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளன.

எனினும் கடந்த வருடங்களைப் போலல்லாமல் இவ்வருடம் தாம் பாவித்து வந்த செயற்கை உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரங்களைப் பாவிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதையடுத்து, ஒரு தீர்மானமற்









முறையில் வேளாண்மைச் செய்கையை மேற்கொள்வதற்காகத்தான் வயலைப் பண்படுத்தி வருவதாக விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

தங்களது வயங்காணிகள் செயற்கை உரத்திற்கு பழக்கப்பட்டு விட்ட நிலையில் இயற்கை உரங்கள் வேளாண்மைச் செய்கைக்கு எந்த அளவிற்குச் சாத்தியமாகும் எனத் தெரியாத நிலையில் இவ்வருடம் பெரும்போக வேளாண்மைச் செய்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும், இவ்வருடத்தின் நிலமையைப் பார்த்துதான் இனிவரும் காலங்களில் தமது வேளாண்மைச் செய்கை தொடரும் எனவும் அப்குபதி விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: