6 Sept 2021

சுயதொழில் வருமானத்தை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த 45 மாணவர்களுக்கு, உதவி.

SHARE

சுயதொழில் வருமானத்தை இழந்த   குடும்பங்களைச் சேர்ந்த 45 மாணவர்களுக்கு, உதவி.

கொவிட் 19 காலத்தில் நாடே முடங்கிக் கிடக்கும் இந்நிலையில் சுயதொழிலை இழந்து தவிக்கும் 45 குடும்பங்களைச் சேர்ந்த 45மாணவர்களுக்கு,  மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியில் பாடநெறியை தொடர்வதற்கான அங்கத்துவப் பணத்தைச் புலன் பெயர்ந்து வாழும் நலன் விரும்பி ஒருவர் செலுத்தி மாணவர்களின் கல்வி  வளர்ச்சிக்கு உதவியுள்ளாார்.

தற்போதைய சூழ் நிலையில் தொழிலின்றி வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வங்கிக்குச் சென்று அங்கத்துவப் பணத்தைச் செலுத்த முடியாமல் திகைத்து நின்ற தருணத்தில் இவ் உதவி குறித்த நபரால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 20 மாணவர்களிற்கு புலமைப்பரிசில் வழங்கும் செலவை தான் பொறுப்பெடுத்து அப்பணத்தையும் புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்ப நிறுவகத்துக்கு வழங்கியிருக்கிறார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த அயர்லாந்திலுள்ள Royal இல் தலைமைக் கண்காணிப்பு உத்தியோகஸ்தராக கடமை புரிகின்றார் அருள்குமரன் என்பரே குறித்த மாணவர்களின் எதிர்கால கல்விக்கு உதவி புரிந்துள்ளார். 

நாங்கள் தொழில்கல்வி பாட நெறிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும் அதனை காலத்தின் கோலத்தால் அதனை தொடரமுடியாதோ என எண்ணியிருந்த வேளை குறித்த நலன் விரும்பியின் உதவியானது மிகும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் அவருக்கு தங்களது நன்றியைத் தெரிந்து கொள்வதாக இதனூடாக பயனடையும் மாணவர்கள் இதன் போது தெரிவித்துள்ளனர்.



 

SHARE

Author: verified_user

0 Comments: