9 Aug 2021

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் உதவியில் காவியா பெண்கள் நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு.

SHARE

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின்  உதவியில் காவியா பெண்கள்  நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு. 

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின்  நிதி அனுசரனையில் காவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிறுவனத்தினால் மீளக்குடியமர்ந்த மக்களுக்கான  நடைமுறை படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நீடித்து நிலைத்த  வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வியாபாரத் திட்டங்களும் அதற்கான உபகரணங்களும் ஞாயிற்றுக்கிழமை (08) பிற்பகல் வழங்கிவைக்கப்பட்டது.

மீள் குடியேற்ற கிராமமான கருங்காலியடி கிராமத்தில் உள்ள மீன்பிடி, விவசாயம் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இவ் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.

காவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி. யோகமலர் அஜித்குமார் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் மற்றும் சிறப்பு அதிதிகளாக ஐக்கிய நாட்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் திட்ட நிபுணர் கே. பார்த்தீபன், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு,  மற்றும் பிரதி திட்டப் பணிப்பாளர், கிராம சேவையாளர், மீன்பிடி நீரியல் வள உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமது  வாழ்வாதாரத்திற்க்கா குளிர்சாதனப்பெட்டிகள், தோணிகள், வலைகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிவைக்ப்பட்டன.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் அனுசரனையில் காவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிறுவனத்தினால், நீடித்து நிலைத்த  வாழ்வாதார உதவி திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









 


SHARE

Author: verified_user

0 Comments: