11 Aug 2021

முதன்முறையாக காத்தான்குடியில் சர்வமத தலைவர்கள் பங்கு பற்றிய இன ஐக்கிய இஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் விழாவும் கொரோனா நீங்க பிரார்த்தனையும்.

SHARE

முதன்முறையாக காத்தான்குடியில் சர்வமத தலைவர்கள் பங்கு பற்றிய இன ஐக்கிய இஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் விழாவும் கொரோனா நீங்க பிரார்த்தனையும்.

முதன்முறையாக மட்டக்களப்பு காத்தான்குடியில் சர்வமத தலைவர்கள் பங்கு பற்றிய இன ஐக்கிய இஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் விழா செவ்வாய்கிழமை (10)   மாலை நடைபெற்றது. காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடி அல் அக்ஷா ஜும்ஆப்பள்ளிவாயலில் இந்த விழா நடைபெற்றது.

இன ஐக்கியத்தை மேம்படுத்தும் வகையில் செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்ட 1443 இஸ்லாமிய புதுவருடத்தை வரவேற்கும் முஹர்ரம் மற்றும் ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் இதன் போது நடைபெற்றது.

காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி எச்.எம்.ஸாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மட்டக்களப்பு சர்வமத அமைப்பின் தலைவர் சிவசிறீ சிவபாலன் குருக்கள், மட்டக்களப்பு எஹெட் கரிட்டாஸ் இயக்குனர் அருட்தந்தை ஏ.இயேசுதாசன், மட்டக்களப்பு ஊறனி புனித யோவால் தேவாலயத்தின் அருட்தந்தை ஜே.ரொஹான், காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி எஸ்.எம்.அலியார் உட்பட உலமாக்கள் சர்வமத முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தலைவர் எம்.ஐ.எம்.உசனார் உட்பட சர்வமத தலைவர்கள் சிறப்புரையாற்றியதுடன் இறுதியில் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி விஷேட பிராத்தனையையும் நடாத்தினார். சுகாதார நடைமுறைகளை பேணி இந்த நிகழ்வு நடைபெற்றதடன் கொரோனா உலகமெங்கும் நீங்க விசேட பிரார்த்தனையும் இடம் பெற்றது.








SHARE

Author: verified_user

0 Comments: